வாகன விபத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் காயம்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் உள்ளிட்ட குழுவினர் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
சிலாபம் - பத்துலுஒய பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற இவ்வாகன விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் காயமடைந்ததுடன், அவருடன் வாகனத்தில் பயணித்த மேலும் 5 பேரும் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதிமன்றத்தில் இன்று உப்புக்குளம் மீனவர்களின் வழக்கு மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன், மன்னார் நீதிவானை அச்சுறுத்திய வழக்கு என்பவற்றின் விசாரணைகள் இடம்பெறுகின்றன. அதில் பங்கேற்பதற்காகவே ஹுனைஸ் பாரூக், ஐந்து சட்டத்தரணிகளுடன் மன்னார் நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தார். இதன்போது அவர்களின் வாகனம் வீதியை விட்டுவிலகி விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்று மன்னார் நீதிமன்ற விசாரணைகளை கண்காணிப்பதற்காக சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Reviewed by NEWMANNAR
on
September 24, 2012
Rating:

No comments:
Post a Comment