அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கோந்தைப்பிட்டி விவகாரம்-மனு மீதான விசாரணை தள்ளுபடி

மன்னாரில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கை எனும் குற்றச்சாட்டின் கீழ் மன்னார் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மன்னார் கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகம் தொடர்பான வழக்கினை மன்னார் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்துள்ளது..
 மன்னார் நீதவான் நீதிமன்றில் இன்று (25.09.2012) எடுத்துக்கொள்ளப்பட்ட பீ401/12 எனும் வழக்கின் விசாரனையின் போதே மன்னார் நீதவான் அ.யூட்சன் மேற்படி வழக்கினை தள்ளுபடி செய்யுமாறு மன்னார் பொலிஸாருக்கு கட்டளை பிரப்பித்துள்ளார்.


 மன்னார் கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகம் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட கலவரத்தை அடுத்து மன்னார் பொலிஸாரினால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மேலும் ஒரு இனமுறுகல் ஏற்படாமல் தடுக்கும் முகமாக நீதிமன்றில் கடந்த யூலை மாதம் 16ம் திகதி மனு ஒன்று தாக்கல் செய்திருந்தனர். குறித்த மனுவானது பீ 401/12 எனும் வழக்கிலக்கத்தில் குற்றவியல் சட்ட நடவடிக்கையின் 106 வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவானது கடந்த யூலை மாதம் 17ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 மன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த வழக்கில் ஜோசப்வாஸ் நகர் கிராம மீனவர்களது 13 மீன் வாடிகள் மற்றும் பெறுமதி வாய்ந்த மீன் பிடி உபகரணங்கள் கடந்த யூலை மாதம் 13ம்திகதி (13-07-2012) வெள்ளிக்கிழமை உப்புக்குளம் பகுதியைச்சேர்ந்தவர்களால் சேதமாக்கப்பட்டிருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில் குறித்த சம்பவத்தை தொடர்ந்து இரு சமூகங்களுக்குமிடையே முறுகல் நிலை ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு அவற்றை தடுக்கும் முகமாக மன்னார் உப்புக்குளம், ஜோசப் வாஸ் நகர் மீனவர்கள் மற்றும் மன்னார் அரசதிபர்,பிரதேச செயலாளர் பிரதிவாதிகளாக குறிப்பிட்டு அவர்களுக்கு நீதிமன்றம் கட்டளையிட வேண்டும் என பொலிஸார் மன்றை கோரியிருந்தனர்.

 இதனடிப்படையில் குறித்த வழக்கு விசாரணையின் போது அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு ஜோசப் வாஸ் நகர மீனவர்களுக்கான பொருத்தமான இறங்கு துறை ஒன்றினை வழங்குமாறு ஏற்கனவே கட்டளை ஒன்றினை நீதவான் பிறப்பித்திருந்தார். இந்நிலையில் மேற்குறித்த வழக்கின் விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் நீதிமன்றில் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மன்னார் நீதவான் ஏ.யூட்சன் மன்னார் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் சட்ட நடவடிக்கையின் 106 வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மணு மீதான விசாரணைக்கு தற்போது எந்த தேவைப்பாடும் இல்லை என்பதனால் அதனை தள்ளுபடி செய்யுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டிருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து மன்னார் ஜேசப்வாஸ் நகர் மீனவர்கள் தொடர்ந்தும் கோந்தைப்பிட்டி இறங்கு துறையைப்பயண்படுத்தி கடல் தொழிலில் ஈடுபட் முடியும் என தெரிவிக்கப்பட்டுளளது. (மன்னார் நிருபர்
மன்னார் கோந்தைப்பிட்டி விவகாரம்-மனு மீதான விசாரணை தள்ளுபடி Reviewed by NEWMANNAR on September 25, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.