தலைமன்னார் வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவனொருவன் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றம்
மன்னார், தலைமன்னாரின் பியர் பகுதியிலுள்ள கடற்கரைப்பகுதிக்கு அண்மித்த காட்டுப்பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின்போது 3 சிறுவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த இச்சிறுவர்கள் விளையாட்டு பொருளென நினைத்து வெடிபொருளினை எடுத்து விளையாடியபோது அது வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தலைமன்னார் பகுதியைச் சேர்ந்தவர்களான பிரபு (வயது 14), கமாஸ் (வயது 14), சாள்ஸ் அன்ரனி (வயது 15) ஆகியோரே காயமடைந்தவர்களாவர். இவர்களில் கமாஸ் (வயது 14) என்ற சிறுவனே மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏனைய 2 சிறுவர்களும் தொடர்ந்து மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலைமன்னார் வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவனொருவன் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றம்
Reviewed by NEWMANNAR
on
September 25, 2012
Rating:

No comments:
Post a Comment