அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இராணுவத்தின் 543 ஆவது படைப்பிரிவு ஏற்பாடு செய்திருந்த கௌரவிப்பு நிகழ்வு.-படங்கள் இணைப்பு,

தேசிய மட்டத்தில் 19 வயது பிரிவு உதைப்பந்தாட்டப் போட்டியின் போது முதலாம் இடத்தை பெற்ற மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று இராணுவத்தின் 543 ஆவது படைப்பிரிவு ஏற்பாடு செய்திருந்த நிலையில் குறித்த நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை(25-09-2012)மதியம் மன்- புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்றது.


 இதன் போது விருந்தினர்களாக இராணுவத்தின் 543 ஆவது படைப்பிரிவு அதிகாரி ராமநாயக்க,இராணுவத்தின் 43 ஆவது படைப்பிரிவு அதிகாரி மைத்திரி டயேஸ்,மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான்,பாடசாலையின் முதல்வர் அருட்சகோதரர் ஒகஸ்;ரின் உற்பட பலர் கலந்து கொண்டதோடு குறித்த மாணவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

 இதன் போது குறித்த மாணவர்களும்,பயிற்சி ஆசிரியரும் கௌரவிக்கப்பட்டனர்.பின் இராணுவத்தின் 543 ஆவது படைப்பிரிவு ஏற்பாடு செய்திருந்த மதிய போசனை விருந்துபசாரமும் இடம் பெற்றது.









மன்னாரில் இராணுவத்தின் 543 ஆவது படைப்பிரிவு ஏற்பாடு செய்திருந்த கௌரவிப்பு நிகழ்வு.-படங்கள் இணைப்பு, Reviewed by NEWMANNAR on September 25, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.