அண்மைய செய்திகள்

recent
-

பாதுகாப்பான மன்னாரை நோக்கி' என்ற 100 நாள் டெங்கு நோய் ஒழிப்பு வேலைத்திட்டம் -படங்கள் இணைப்பு

டெங்கு நோய் ஒழிப்பு வேலைத்திட்டம் - மன்னார் மாவட்டம்
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைத்தின் தலைமையில் 'பாதுகாப்பான மன்னாரை  நோக்கி' என்ற 100  நாள் வேலைத்திட்டம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிட்த்தக்கது.
இவ்வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய இலக்கான  டெங்கு நோய் அபாயத்தை கட்டுப்படுத்தும் முகமாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் மாவட்ட கிளையின் நிதி அனுசரனையில் பல்வேறு செயற்பாடுகள் அமுல்படுத்தப்படுவருகின்றது.

மேலதிக அரசாங்க அதிபர் தலைமையிலான மாவட்ட மட்ட பங்குதாரர்களின் திட்டமிடல் கூட்டம் - 19.09.2012


கௌரவ தவிசாளர் - மன்னார் நகர சபை மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும்  பிராந்திய தொற்று நோய் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி  உதவிப்பணிப்பாளர் - அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின்  தலைமையில்  மன்னார் நகர கிராம உத்தியோகத்தர்களுக்கும் ரூபவ் மன்னார் நகர பொது சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் மற்றும் பல அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தவர்களுக்கும் தொண்டர்களுக்கும் டெங்கு நோய் தொர்பான  விழிப்புணர்வு மற்றும் வீடுகளை மேற்பார்வை செய்வதற்கான திட்டமிடல் செயற்பாடும் மன்னார் நகர சபையில் இடம் பெற்றது. – 20.09.2012

மன்னார் நகரப்பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பிரச்சார நடவடிக்கை மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல் மற்றும் பெனர்கள் காட்சிப்படுத்தல் என்பவை இடம்பெற்றது. - 21.09.2012   - 22.09.2012





 பள்ளிமுனை  உப்புக்குளம்  மூர் வீதி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் வீடுகளுக்கு சென்று டெங்கு நோய் பரவக்கூடிய இடங்கள் காணப்படுகின்றனவா என மேற்பார்வை செய்யப்பட்டது. இச்செயற்பாட்டில் பொது சுகாதார வைத்திய அதிகாரி பொலிஸ் உத்தியோத்தவர்கள்  செஞ்சிலுவை சங்க தொண்டர்கள் மற்றும் பிரக்டிகல் அக்சன் தொண்டர்களின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மேற்பார்வையில் நடைப்பெற்றது.

இவ்வாறாக மேலும் பல செயற்பாடுகள் பாடசாலை மட்டங்களிலும்  அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிளும் மேற்கொள்ளப்படவுள்ளது.


Rukshan Oswald                                                                                                                                                                         
Branch Executive Officer

Sri Lanka Red Cross Society 
| No. 04 | Field Lane, 
Sinnakkadai 
|Mannar| 
Sri Lanka
| Gen:  +94232222277 | 
Mob:    +94777369949/ 0718457319 |
 Fax:   +94232222277
| e-mail: mannarbei@redcross.lk
 | www.redcross.lk



பாதுகாப்பான மன்னாரை நோக்கி' என்ற 100 நாள் டெங்கு நோய் ஒழிப்பு வேலைத்திட்டம் -படங்கள் இணைப்பு Reviewed by NEWMANNAR on September 28, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.