அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரில் முஸ்ஸிம் மக்கள் அமைதி எதிர்ப்பு நடவடிக்கை-வர்த்தக நிலையம் பூட்டு-பட இணைப்பு

உலகளாவிய ரீதியில் வாழ்கின்ற முஸ்ஸிம் மக்களின் மனதினை புண்படுத்தும் விதத்தில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 'இன்னஸன் ஒஃப் முஸ்ஸிம்ஸ்' எனும் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகளாவிய ரீதியில் வாழ்கின்ற முஸ்ஸிம் மக்கள் தமது எதிர்ப்பு போராட்டங்களையும்,கண்டனங்களையும் வெளிப்படுத்தி வரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மன்னார் முஸ்ஸிம் மக்கள் அமைதியான முறையில் குறித்த திரைப்படத்திற்கு எதிராக தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.


 இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் பஸார் பகுதியில் உள்ள மற்றும் மன்னார் தினச்சந்தை வியாபார நிலையத்தில் உள்ள முஸ்ஸிம்களின் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு தமது அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

 முழு நாளும் குறித்த முஸ்ஸிம் மக்களின் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை மதியம் மன்னார் பெரிய கடை ஜும்மா பள்ளிவாயலில் இடம் பெற்ற ஜூம்மாத்தொழுகையின் பின் சிறப்பு 'துஆ'பிரார்த்தனை ஒன்றும் இடம் பெற்றது. இதன் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி.பாரூக் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.




 இதே வேளை குறித்த திரைப்படத்திற்கு எதிராக அகில இலங்கை ஜம்மியத்துல் உலாமா சபையின் மன்னார் கிளையினால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடாக அமெரிக்க தூதரகத்திற்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை இடம் பெற்று வருவதாக பெரிய கடை ஜும்மா பள்ளிவாயல் மௌலவி தெரிவித்தார்.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரில் முஸ்ஸிம் மக்கள் அமைதி எதிர்ப்பு நடவடிக்கை-வர்த்தக நிலையம் பூட்டு-பட இணைப்பு Reviewed by NEWMANNAR on September 28, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.