மன்னார் உப்புக்குளம் வடக்கு பிரதான வீதியில் இளைஞர் குழுக்களின் அட்டகாசம்-அச்சத்தில் இளம் பெண்கள்.
மன்னார் உப்புக்குளம் வடக்கு பிரதான வீதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு முன் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒன்று கூடுகின்ற இளைஞர் குழு அவ்வழியால் செல்லுகின்ற பாடசாலை மாணவிகளுடனும்,இளம் பெண்களுடனும் தகாக முறையில் நடந்து கொள்வதோடு பலவந்தப்படுத்தி தொலைபேசி இலக்கம் கேட்பதாகவும் குறித்த பகுதி மக்களும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் தெரிவிக்கின்றனர்.
மன்னார் உப்புக்குளம் வடக்கு பிரதான வீதியில் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று அமைந்துள்ளது.இதற்கு சற்று அருகில் பல கடைகளைக்கொண்ட கடைத் தொகுதி ஒன்றும் உள்ளது.
குறித்த பகுதிக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் வரும் இளைஞர் குழு ஒன்று அப்பகுதியால் செல்லும் பாடசாலை மாணவிகளையும்,இளம் யுவதிகளையும் நக்கலடிப்பதோடு தம்மை காதலிக்குமாறு பலவந்தப்படுத்தி தொலை பேசி இலக்கம் கேட்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்hவத்தை தட்டிக்கேட்பவர்களை குறித்த இளைஞர்கள் அச்சுறுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காலை நேரங்களில் குறித்த குழுவினர் பாடசாலை மாணவிகளுடன் குறித்த வீதியில் தகாத முறையுடன் நடந்து கொள்வதோடு குறித்த மாணவிகளை பின் தொடர்ந்து சென்று பாடசாலை வரை செல்லுகின்றனர்.
மாலை 5 மணியளவில் மீண்டும் அவ்விடத்திற்கு வரும் குறித்த குழுவினர் குறித்த கடைகளுக்கு முன் நின்று விட்டு மாலை நேர வகுப்புக்கள் முடிந்து வரும் மாணவிகளுடன் பல்வேறு பிரச்சினைகளில் ஈடுபட்டு வருவதோடு குறித்த மாணவிகள் பயணிக்கும் துவிச்சக்கர வண்டிகளையும் இடை மறிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாலை 8 மணிவரை குறித்த இளைஞர் காடையர் குழு அவ்விடத்தில் நின்று பெண்களுடன் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
பின் அவ்விடத்தில் மது அருந்தி விட்டு பாரிய சத்தம்மிட்டுச் செல்லுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த காடையர் குழுவினால் அப்பகுதி மக்களும்,குறிப்பாக அப்பகுதியூடாக வீடு செல்லும் பெண்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
எனவே மன்னார் பொலிஸார் குறித்த விடையத்தில் தலையிட்டு குறித்த கடையர் குழுவினரை கைது செய்து சட்ட சடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்களும்,பாதிக்கப்பட்டவர்களும் , சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(மன்னார் நிருபர்)
மன்னார் உப்புக்குளம் வடக்கு பிரதான வீதியில் இளைஞர் குழுக்களின் அட்டகாசம்-அச்சத்தில் இளம் பெண்கள்.
Reviewed by NEWMANNAR
on
September 21, 2012
Rating:

No comments:
Post a Comment