மீள் குடியேற்ற கிராம மக்களுக்கு மன்னார் மாவட்ட விவசாய கைத்தொழில் சம்மேளனத்தினால் வங்கிக்கடன் பெற்றுக்கொள்ளல் தொடர்பான விசேட கருத்தரங்கு.
மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மன்னார் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களில் குடியமர்ந்துள்ள மக்களின் நலன் கருதி மன்னார் மாவட்ட விவசாய கைத்தொழில் சம்மேளனத்தின் உதவியுடனும்,இலங்கை விவசாய கைத்தொழில் ஒன்றியத்தின் உதவியுடனும் குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வங்கிக்கடன்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக பூரண விளக்கமளிக்கும் செயலமர்வொன்று நேற்று வியாழக்கிழமை(20-09-2012) மடு பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் இடம் பெற்ற குறித்த செயலமர்வில் மக்கள் வங்கியின் சிரேஸ்ட ஆலோசகர் பத்ம சிறி, மன்னார் இலங்கை வங்கியில் உதவி முகாமையாளர் சருஸ் வாஸ்,மடு உதவி அரசாங்க அதிபர் எப்.சி.சத்திய சோதி ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர். -மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பண்டிவிருச்சான்,பாலம் பிட்டி,தச்சனா மருதமடு,சின்னப்பண்டிவிருச்சான் ஆகிய கிராம மக்கள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தனர்
குறித்த கிராம மக்கள் விவசாயம் மற்றும் தோட்டச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த மக்கள் வங்கியில் கடன்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பணக்காரர்களிடமும்,முதலாளிமார்களிடமும் அதி கூடிய வட்டிக்கு பணத்தை பெற்று தமது நெற்பயிர்ச் செய்கையை செய்த நிலையில் நட்டத்தின் மத்தியில் தமது கடனை திருப்பிக்கொடுக்கின்றனர். -இதனால் இந்த மக்களின் வாழ்வாதாரத்தில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறித்த கிராம மக்களுக்கும் வங்கிகளுக்கும் இடையில் உள்ள தொடர்பு பாரிய விரிசலாக காணப்படுகின்றது.
குறித்த பிரச்சினைகளை தீர்த்து எதிர் வரும் காலங்களில் மக்கள் விவசாய கடனை வங்கிகளினுடாக மிகவும் குறைந்த வட்டி வீதத்துடன் பெற்றுக்கொள்ளக்கூடிய குறித்த செயலமர்வு அமைந்திருந்தது. குறித்த செயலமர்வின் போது குறித்த கிராம மக்களுக்கும் வங்கிகளுக்கும் இடையில் இருந்த முரண்பாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு நல்லுறவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட விவசாய கைத்தொழில் சம்மேளனத்தின் பணியாளர் சி.றோய் மற்றும் இலங்கை விவசாய கைத்தொழில் ஒன்றியத்தின் மாவட்ட திட்ட இணைப்பாளர் எஸ்.ஏ.சியாம் சிங் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நகர நிருபர்

Reviewed by NEWMANNAR
on
September 21, 2012
Rating:
No comments:
Post a Comment