மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மாந்தை மேற்கு கூறாய் கிராமத்தில் இருந்து 3 வருடங்களின் பின் போக்குவரத்துச் சேவை ஆரம்பம். - படங்கள் இணைப்பு
மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூறாய் கிராமத்திற்கான போக்கு வரத்துச் சேவை ஒன்றை மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கம் இன்று சனிக்கிழமை காலை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளது.
-இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதீப் விஜய சேகர அவர்கள் குறித்த கிராம மக்கள் எதிர்நோக்கும் போக்கு வரத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் அவர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக குறித்த சேவை இன்று சனிக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் தனியார் பேரூந்து சங்கத்தின் தலைவர் ரீ.ரமேஸ் தெரிவித்தார்
.
.
-குறித்த சேவை குறாய் கிராமத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது -இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதீப் விஜய சேகர, மன்னார் தனியார் பேரூந்து சங்கத்தின் தலைவர் ரீ.ரமேஸ்,கூறாய் கிராம சேவகர் ஏ.லோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
-குறித்த தனியார் பேரூந்து சீதுவிநாயகர் புரம்,கூறாய்,ஆத்திமோட்டை,புது க்குளம்,விடத்தல் தீவு,அடம்பன்,ஆண்டாங்குளம் ஊடாக மன்னாரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக குறித்த கிராம மக்கள் போக்கு வரத்துச் சேவைகள் எவையும் இன்றி தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் மக்களின் நலநன கருத்தில் கொண்டு குறித்த சேவை ஆராம்பிக்கப்பட்டதாக மன்னார் தனியார் பேரூந்து சங்கத்தின் தலைவர் ரீ.ரமேஸ் மேலும் தெரிவித்தார்.
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மாந்தை மேற்கு கூறாய் கிராமத்தில் இருந்து 3 வருடங்களின் பின் போக்குவரத்துச் சேவை ஆரம்பம். - படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
September 01, 2012
Rating:

No comments:
Post a Comment