அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கடற்கரை பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் மண் அகழ்வு-தடுத்து நிறுத்துமாறு வன்னி எம்.பி களிடம் கோரிக்கை.

மன்னார் சௌத்பார் கடற்கரைப்பகுதியில் இருந்து தரவன் கோட்டை வரையுமான கடற்கரைப்பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் மண் தொடர்ந்தும் அகழப்பட்டு வருவது குறித்து அப்பிரதேசத்து மக்களும்,பொது அமைப்புக்களும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

-இவ்விடயம் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிக்கையில்,,,

-நாட்டில் ஏற்பட்டிருந்த சுனாமி அனர்த்தத்தின் பின் மன்னார் தீவு பகுதிக்குள் மணல் மண் அகழ்வதற்கான  அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

ஆனால் குறித்த பகுதிகளில் உள்ள காட்டு காணிகளில் பாரிய மணல் மண் அகழ்வு இடம் பெற்று வருகின்றது.

சுமார் 5 வருடங்களாக குறித்த செயற்பாடு இடம் பெற்று வருகின்றது.தற்போது மணல் மண் அகழ்வு அதிகரித்துள்ளது.

-தற்போது குறித்த பகுதியில் மணல் மண் அகழ்வதற்கு 3 மாதங்களுக்கான  அனுமதியும் அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

காலை 5 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை தொடர்ச்சியாக குறித்த செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றது.

தற்போது தனி நபர் ஒருவர் இரவு நேரங்களிலும் மணல் மண் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றார்.

-பாதிக்கப்பட்டு வரும் கிராம மக்களாகிய நாம் மண் அகழ்வோரிடம் கேட்கின்ற போது அதற்கான அனுமதிப்பத்திரத்தை காட்டுகின்றனர்.

இதனால் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் உள்ளனர்.

தற்போது மன்னார் சௌத்பார் கடற்கரை தொடக்கம் தரவன் கோட்டை கடற்கரை வரை 40 தொடக்கம் 50 மீற்றர் வரையுமான மண் மேடு மாத்திரமே காணப்படுகின்றது.

ஏனைய அனைத்தும் அகழப்பட்டு விட்டது.இதனால் தற்போது மண் மேடு உடைந்து கடல் நீர் கிராமங்களுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

-குறித்த மணல் மண் அகழ்வினால் சௌத்பார்,ஸ்ரேஸன்,சாந்திபுரம்,எமில் நகர்,தரவன் கோட்டை,இருதய புரம்,பனங்கட்டிக்கொட்டு உற்பட பல கிராமங்களுக்குள் கடல் நீர் உட்செல்லுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

-மன்னார் தீவுக்குள் மணல் மண் அகழிவிற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ள போதும் மன்னார் பிரதேச செயலக,மாவட்டச் செயலக அதிகாரிகள் சிலர் தணிப்பட்ட முறையில் குறித்த அனுமதியை வழங்கியுள்ளதாகவும் அவர்கள் எதிர்கால பிரச்சினைகளை சிந்திக்காது செயற்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

-எனவே குறித்த பகுதிகளில் இடம் பெற்று வரும் சட்ட விரோத மணல் மண் அகழ்வை உடன் நிறுத்தி இயற்கை அணர்த்தங்களில் இருந்து தம்மை பாதுகாக்குமாறு பாதிக்கப்பட்ட மக்களும்,பொது அமைப்புக்களும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் ,எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

(மன்னார் நிருபர்)
மன்னார் கடற்கரை பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் மண் அகழ்வு-தடுத்து நிறுத்துமாறு வன்னி எம்.பி களிடம் கோரிக்கை. Reviewed by NEWMANNAR on August 31, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.