அமைச்சர் றிஷாட்டின் ஆட்சேபங்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரிப்பு
நீதியரசர்கள் எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, தீபாலி விஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதியான றிஷாட் பதியுதீன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பாயிஸ் முஸ்தபா, மூன்று முதனிலை ஆட்சேபங்களைத் தெரிவித்தார்.
பிரதிவாதி மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் எதுவுமில்லை என்பது முதலாவது ஆட்சேபமாகும்.
குற்றச்சாட்டுகள் தெளிவாக இல்லை எனவே, பிரதிவாதி மீது குற்றம் சுமத்தப்பட முடியாது என்பது இரண்டாவது ஆட்சேபமாகும்.
மனுதாரர்களே இந்த வழக்கை நடத்துவதை ஏற்க முடியாது என்பது மூன்றாவது ஆட்சேமாகும். இந்த ஆட்சேபங்களை நீதிமன்றம் நிராகரித்ததது.
மன்னார் நீதவான் பொலிஸில் செய்துள்ள முறைப்பாடு, நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளரின் சத்தியக்கடதாசி என்பன பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்ப போதுமானவை என நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த அடிப்படையில் ஆரம்பநிலை ஆட்சேங்கள் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன. பிரதிவாதியான அமைச்சர் றிஷாட்டிடம் அவர் குற்றவாளியா இல்லையா என கேட்கப்பட்டது.
குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, பிரதிவாதி தனக்கு ஆங்கிம் தெரியாது எனவும் குற்றச்சாட்டுகளின் தமிழ் மொழிபெயர்ப்பு தேவை எனவும் கூறினார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான நீதியரசர் எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா குற்றச்சாட்டுகளை மொழிபெயர்த்தபோது, பிரதிவாதி தான் குற்றவாளி அல்ல எனக் கூறினார்.
அமைச்சர் றிஷாட்டின் ஆட்சேபங்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரிப்பு
Reviewed by NEWMANNAR
on
September 06, 2012
Rating:
No comments:
Post a Comment