அண்மைய செய்திகள்

recent
-

அப்பாவி முஸ்லிம் மக்கள் மீது கடற்படையினரின் அட்டகாசம் - எம். பைசால்

மன்னார் முசலிப் பகுதியில் மீள் குடியேறிய முஸ்லீம் மக்கள் கடற்படையினரால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். அவர்களுடைய வீடுகள் தீக்கிரையாக்கி சேதப்படுத்தியுள்ளனர். அரசாங்கத்தின பாதுகாப்பு பிரிவினரே இதற்கு பொறுப்பாகும். முஸ்லிம்களின் நலன்களில் அக்கறை காட்டுவதுபோல் நடிக்கும் ஆட்சியாளர்களுடன் இருக்கும முஸ்லிம் தலைவர்கள் மௌனமாகவே உள்ளனர்.
சாதாரணமாக ஏனைய பிரிவு மக்களுடன் முரண்பாடுகள் ஏற்படுகின்றபோது வீர வசனங்கள் பேசி போர்க்கொடி தூக்கும் ஆட்சியிலுள்ள முஸ்லிம் தலைவர்கள் அரசாங்காத்தரப்பினர் முஸ்லிம்களுக்கு எதிராக அணிதிரளும்போது மௌனத்தை கடைப்பிடிப்பதன் மௌனம் என்ன? இவர்கள் மகக்ளுக்குத் தெரிவு படுத்த வேண்டும்.
நடைபெற இருக்கும் மூன்று மாகாண சபைத்தேர்தலிலும் முஸ்லிம் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.
இந் நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் தமிழ் மற்றும் சிறுபான்மை சக்திகளுக்கு எதிராக எண்ணற்ற அநியாயம் செய்த இந்த ஆட்சியை முஸ்லிம் மக்கள் ஒருபொழுதும் ஆதரிக்கவே கூடாது. சந்தர்ப்பவாத அரசியல் எதிர்காலத்தில் முஸ்லிம் மக்கள் இடம் பெறமாட்டார்கள் என எண்ணுகிறோம். போலியான வாதங்களையும் சலுகைகளையும் தர முன்வருபவர்களை அடையாளம் காணுங்கள். நேர்மையான அரசியல் சக்திகளை அங்கீகரித்து பண பலம் அரசியல் பலம் என்பவற்றுடன் வருபவர்களை நிராகரியுங்கள்
முஸ்லிம் இடதுசாரி முன்னணி
பொதுச் செயலாளர்,
எம். பைசால்
அப்பாவி முஸ்லிம் மக்கள் மீது கடற்படையினரின் அட்டகாசம் - எம். பைசால் Reviewed by NEWMANNAR on September 06, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.