மன்னார் மாணவர்கள் மத்தியில் கையடக்கத்தொலைபேசியின் பாவனை அதிகரிப்பு.
மன்னார் மாணவர்கள் மத்தியில் தற்போது கையடக்கத்தொலைபேசியின் பாவனை அதிகரித்துள்ளதாகவும் இதனை கட்டுப்படுத்த பாடசாலை நிர்வாகம் முன்வர வேண்டும் என மாணவர்களின் பெற்றோரும்,சமூக ஆர்வலர்களும் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
தற்போது மன்னார் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவ மாணவிகள் வீடுகளில் கையடக்கத்தொலைபேசியினை பயன்படுத்துகின்றனர்.அவர்களில் சிலர் கைத்தொலைபேசியினை பாடசாலைகளுக்கு கொண்டு சென்று மறைமுகமாக பயன்படுத்துவதாகவும் தெரிய வந்துள்ளது.
குறித்த விடயத்தில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் கண்காணித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
குறித்த கையடக்கத் தொலைபேசியில் சினிமாப்பாடல்கள் உள்ளிட்ட பல விடயங்களை பதிவுசெய்து வைத்து பார்ப்பதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதே சமயம் மாலை நேர வகுப்பிற்கு செல்லும் மாணவ மாணவிகள் கையடக்கத் தொலைபேசியினை எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ள பெற்றோர் அவர்கள் தொடர்ந்தும் அதனை பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்ந்தும் பாதிக்கப்படும் என பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாணவர்கள் மத்தியில் கையடக்கத்தொலைபேசியின் பாவனை அதிகரிப்பு.
Reviewed by NEWMANNAR
on
September 09, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment