மன்னார் கரிசல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் மீது தாக்குதல்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,,,,
மன்னார் -தலைமன்னார் பிரதான வீதியில் கரிசல் கிராமம் உள்ளது.குறித்த கிராமத்தில் தமிழ்,முஸ்ஸிம் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் குறித்த ஆலயத்தினுள் இனம் தெரியாத காடையர் குழு ஒன்று கல் வீசுதள்,ஆலயத்தில் உள்ள சொரூபங்களை தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
பின் குறித்த கிராமத்தில் உள்ள கத்தோழிக்க மக்கள் இவ்விடையம் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு பின் குற்தித்த ஆலயம் சூழ்ந்த பகுதிகளிவ் பொலிஸ் பாதுகாப்புக்கள் போடப்பட்ட நிலையில் குறித்த பிரச்சினைகள் ஓய்ந்த நிலையில் காணப்பட்டது.
இந்த நிலையில் கரிசல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் திருவிழா இன்று சனிக்கிழமை இடம் பெறவுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வேஸ்பர் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது நேற்று இரவு அப்பகுதிக்கு வந்த காடையர் குழு ஒன்று குறித்த ஆலையத்தை நோக்கி கற்களினால் எறிந்து விட்டு பட்டாசுகளை கொழுத்தி போட்டு விட்டுள்ளனர்.
குறித்த கல் வீச்சில் திருப்பலியினை ஒப்புக்கொடுத்த அருட்தந்தை ஒருவரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
குறித்த சம்பசம் தொடர்பில் ஆலயத்திங்கு வெளியில் சென்று பார்க்கச் சென்ற 2 இளைஞர்கள் குறித்த காடையர்களினால் தாக்கப்பட்டனர்.
பின் சம்பவம் இடம் பெற்ற பகுதிக்கு பொலிஸாரும்,இராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.
இதே சமயம் குறித்த ஆலயம் மீது தேமற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கேல்வியுற்ற அயல் கிராம கத்தோழிக்க மக்கள் பல நூற்றுக்கணக்கானோர் கருசல் கிராமத்திற்கு சென்றனர்.
பின் இராணுவத்தினரும்,பொலிஸாரும் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு அக்கிராம மக்களுக்கும்,ஆலயத்திற்கும் பாதுகாப்பை வழங்கினர்.
பின் அங்கு கூடியிருந்த பொது மக்கள் தமது வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.தற்போது பொலிஸாரும்,இராணுவத்தினரும் அப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் நகர நிருபர் )
மன்னார் கரிசல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் மீது தாக்குதல்.
Reviewed by NEWMANNAR
on
September 08, 2012
Rating:

No comments:
Post a Comment