மன்னார் வங்காலை கடலில் மிதந்து வந்த திரவத்தை எடுத்து குடித்த இளைஞன் பலி

கடந்த புதன் கிழமை 4 இளைஞர்கள் வங்காலை கடற்கரைப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதன் போது வடிவம் கொண்ட போத்தல் ஒன்று மிதந்து வந்து கரை ஒதுங்கியதை கண்ட குறித்த இளைஞர்கள் குறித்த போத்தலை எடுத்து பார்த்துள்ளனர்.
அதன் போது குறித்த போத்தலில் உள்ளது வெளிநாட்டு சாராயம் என அவர்கள் 4 பேரூம் நினைத்துள்ளனர்.
-இந்த நிலையில் குறித்த போத்தலில் இருந்ததை 4 இளைஞர்களும் அறுந்தியுள்ளனர்.
இதன் போது அவர்களில் சிலர் வாந்தி எடுத்து பின் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.
இருப்பினும் ஒரு இளைஞரின் நிலைமை மோசமான நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு அவர்களுடைய பெற்றோர் கொண்டு சென்று வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இதன் போது வைத்தியரின் பரிசோதனையின் போது அவர்கள் அறுந்திய மாதுசாராம் என கூறப்பட்டதின் வெற்றுப்போத்தலை வைத்தியரிடம் ஒப்படைத்த போது அது மதுசாரம் அல்ல அவர்கள் அறுந்தியது சடலங்களை பழுதடையாது இன்பம் பண்னும் ஒரு வகை மருந்து என தெரிய வந்தது.
பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 28 வயதுடைய இளைளுன் அதி தீவிர சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்ட போதும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
, மன்னார் இணையத்தள நிருபர்
மன்னார் வங்காலை கடலில் மிதந்து வந்த திரவத்தை எடுத்து குடித்த இளைஞன் பலி
Reviewed by NEWMANNAR
on
September 03, 2012
Rating:

No comments:
Post a Comment