மன்னாரில் இருந்து ஆஸி நோக்கி சென்ற பலரது நிலை இது வரை என்னவென்று தெரியாத நிலையில் குடும்பத்தார் பரிதவிப்பு.
மன்னார் மாவட்டத்தில் இருந்து கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா சென்ற பலரது நிலமை இது வரை என்னவென்று தெரியாத நிலையில் அவர்களுடைய குடும்பங்களும்,உறவினர்களும் பெரும் துயரத்தில் வாழ்ந்து வருவதாக தெரிய வருகின்றது.
தற்போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்லுகின்றனர்
.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்காணவர்கள் அவுஸ்திரேலியா செல்வதாக சென்றுள்ளனர்.
இவர்களில் பலர் ஆஸியை சென்றடைந்த நிலையில் தமது குடும்பத்தாருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆனால் அதிகலவானவர்கள் இது வரை எவ்வித தொடர்புகளும் இன்றி இருப்பதாக உறவினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக ஆஸி நோக்கி சென்றுள்ளனர்.
இவ்வாறு சென்றவர்களில் அதிகலவானவர்கள் கடற்தொழிலில் ஈடுபடுபவர்கள் ஆவர்.
இவர்கள் படகுக்கட்டணமாக 5 இலட்சம் ரூபாய் தொடக்கம் 9 இலட்சம் ரூபாய் வரை செலுத்தியே சென்றுள்ளனர்.
பலர் கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணம்,திருகோணமலை,கிளிநொச்சி,நீர் கொழும்பு கடற்கரையூடாக தமது பயணங்களை மேற்கொண்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மூர்வீதி,பணங்கட்டுக்கோட்டு,வங்காலை,
பேசாலை,தலைமன்னார் உற்பட மன்னார் மாவட்டத்தின் சகல பாகங்களில் இருந்தும் அதிகவசான தமிழர்கள் ஆஸி நோக்கிச் சென்றுள்ளனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் சென்ற பலர் இது வரை தமது குடும்பத்தினருடனும்,உறவினர்களிடனும் எது வித தொடர்பையும் ஏற்படுத்தவில்லை என அவர்களுடைய உறவிர்கள் அச்சம் தெரிவித்துள்ளதோடு இவர்களுடைய நிலவரம் தொடர்பில் எங்கு முறையிடுவது என தெரியாத நிலையில் உறவினர்கள் நிர்க்கதியான நிலையில் உள்ளனர்.

Reviewed by NEWMANNAR
on
September 03, 2012
Rating:

No comments:
Post a Comment