அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேசங்களில் சுவாமி விவேகானந்தரின் 150 வது ஆண்டு ஜனன தின விழா-பட இணைப்பு.

நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்ற சுவாமிஜியின் 150 வது பிறந்த ஆண்டு விழாவானது, மன்னார் மாவட்டத்திலும் அதி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 மன்னார் மாவட்ட மட்டத்தில் பதின்மூன்று கிராமங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாக்கள் பிரதேச விழாக்களாகவும், மன்னார் நகர மட்டத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட விழா நகர விழாவாகவும் பதிவாயின.


 கிராம மட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட விழாக்கள் அனைத்துமே சொல்லொணா சிறப்பு வாய்ந்தவையாக அமைந்தன. சுவாமிஜியின் திருவுருவ பவனிகளும், அதில் கலந்துகொண்ட திரளான மக்களும், நீளமான ஊர்வலங்களும், வீதிகள் நிறைந்து காணப்பட்ட தோரணங்களும், நந்திக்கொடிகளும், பக்தி கீதங்களும் ஒவ்வொரு கிராமத்தின் கவனத்தையும் ஈர்த்து, பரவசம் தந்தது.

 ஊர்வலங்கள் சென்றடைந்த விழாமண்டபங்களிலும் வெகு நேர்த்தியாக நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. கண்கவர் கலை நிகழ்வுகள், எழுச்சிமிக்க சொற்பொழிவுகள், ஆன்மீக கருத்துக்கள் முதலியவற்றுடன் முன்னெடுக்கப்பட்ட விழாக்களை கிராம மக்கள் ஏனைய கிராமங்களுடன் போட்டியிடும் வண்ணம் நடத்தியது பெருமைக்குரியது.

 அடம்பன், வட்டக்கண்டல், பேசாலை, முசலி, தெட்சணாமருதமடு, இலுப்பைக்கடவை, இரணை இலுப்பைக்குளம், சன்னார், ஆண்டாங்குளம், நானாட்டான், திருக்கேதீஸ்வரம் முதலிய பிரதேசங்களில் அனுட்டிக்கப்பட்ட சுவாமிஜியின் இந்த நிகழ்வுகள் பெரிதும் மக்களால் பாராட்டப்பட்டன.. நகர விழா .. நகர விழாவானது மன்னாரின் மத்திய நகரில் பிரம்மாண்டமாக அமைய திருவருள் கிட்டியிருந்தது.

பிரதேச விழாக்களுக்கு மகுடமாக நகர விழா அமையவேண்டும் என்ற பொறுப்புடன் சகல ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்கள் விழா ஏற்பாட்டாளர்கள். நிகழ்ச்சி நிரல்களும் அவ்வாறே அமைந்தன. வீதிகளில் தோரணங்கள், நந்திக்கொடிகள், பதாதைகள், சுவாமிஜியின் திருவுருவப்படங்கள் பெருமளவில் அமைகின்றன.



 மன்னார் பெரியகடை ஞான வைரவர் ஆலயத்திலிருந்து திருவுருவ பவனி 28.10.2012 இன்று புறப்பட்டு, தபாலக வீதி வழியாக நகர மத்தியை அடைந்து, அங்கிருந்து பள்ளிமுனை வீதி வழியாக சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலையை வந்தடைந்து, அங்கே விமரிசையாக விழா இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இடபக்கொடியேற்றல், மற்றும் மங்கல இசையுடன் ஆரம்பித்து சுவாமிஜியின் கருத்துக்களை பிரதிபலிக்கும் சொற்பொழிவுகளும், கலைகிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன ..
மன்னார் பிரதேசங்களில் சுவாமி விவேகானந்தரின் 150 வது ஆண்டு ஜனன தின விழா-பட இணைப்பு. Reviewed by NEWMANNAR on October 28, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.