மன்னாரில் மழையால் 1,737 பேர் பாதிப்பு
மன்னார் மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழையைத் தொடர்ந்து இதுவரையில் 469 குடும்பங்களைச் சேர்ந்த 1,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் இன்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார், நானாட்டான், முசலி, மடு ஆகிய 4 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறி உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
இதேவேளை, சிலாபத்துறை - புத்தளம் பிரதான வீதி மற்றும் சங்குப்பிட்டி வீதிகளூடான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சங்குப்பிட்டி வீதியில் தேத்தாவாடி மற்றும் பாலியாறு பிரதான வீதிகளின் இருமருங்கிலும் வெள்ளநீர் பாய்வதால்; இவ்வீதியூடான போக்குவரத்து தடைசெய்யப்பட்ட நிலையில,; ஏ – 9 வீதியூடாக மாற்றப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஈடுபட்டுவருவதாகவும் கூறினார்

Reviewed by NEWMANNAR
on
October 31, 2012
Rating:
No comments:
Post a Comment