அண்மைய செய்திகள்

recent
-

இன்றும் மழை தொடரும், மீனவர்களைக் கடற்றொழிலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


வடக்கு, கிழக்கில் இன்று புதன்கிழமையும் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கடும் காற்று வீசும் என்பதால் மீனவர்களைக் கடற்றொழிலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 30 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்தில் 61.4 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
முல்லைத்தீவிலிருந்து 100 கிலோ மீற்றர் தூரத்தில் கடலில் தாழமுக்கம் நிலை கொண்டுள்ளது. 


அது வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது. முன்னர் கடும் சூறாவளி வீசும் என்று எதிர்வு கூறப்பட்டது. தற்போது அது வலுக்குறைந்த சூறாவளியாகத் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது.

இதனால் வடக்கு  கிழக்கில் மழை அல்லது இடியுடன் கூடிய கடுங்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கரையோரப் பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களில் கடும் மழையும் ஏனைய பிரதேசங்களில் சாதாரண மழையும் இருக்க வாய்ப்புள்ளது. வடக்கில் கடற்பகுதிகளில் மழை தொடர்ந்து கொண்டிருக்கும். 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும். எனினும் இது 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடல் கொந்தளிப்பும் காணப்படும்.

நேற்றுமுன்தினம் காலை 8.30 மணி தொடக்கம் நேற்றுக்காலை வரை அதிகளவாக திருகோணமலையில் 182.5, யாழ்ப்பாணம் 51.4, வவுனியா 88.2, மன்னார் 19.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று வானிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இன்றும் மழை தொடரும், மீனவர்களைக் கடற்றொழிலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. Reviewed by NEWMANNAR on October 31, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.