அண்மைய செய்திகள்

recent
-

மண்ணைக் காத்து வீரத்துடன் போராடிய வன்னி மாமன்னன் பண்டாரவன்னியனின் 209வது நினைவு

அன்னியரின் வல்லாண்மை ஆட்சிக்கு எதிராக தமது மண்ணைக் காக்க வீரத்துடன் போராடிய வன்னி மாமன்னன் பண்டாரவன்னியனின் 209வது நினைவு நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் அனுட்டிக்கப்படவுள்ளது.


 எதிர்வரும் 31ம் நாள் புதன்கிழமை காலை 10மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் பண்டாரவன்னியன் நினைவு நிகழ்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையின் ஒருங்கிணைப்பில், வவுனியா மாவட்ட பொது அமைப்புகளும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முன்னதாக வவுனியா மாவட்ட செயலகத்தின் அருகில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் நிகழ்வுகள் அனைத்தும் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

 இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதுடன், வவுனியா மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்களும் பொது மக்களும் பங்குபற்ற உள்ளன.

 நமது நாட்டைக் காப்பதற்கு இறுதிவரை போராடிய வன்னி மன்னனின் நினைவுதினத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மண்ணைக் காத்து வீரத்துடன் போராடிய வன்னி மாமன்னன் பண்டாரவன்னியனின் 209வது நினைவு Reviewed by NEWMANNAR on October 28, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.