மாணவர்களின் முழுச்சுமைகளையும் பெற்றோர்கள் ஆசிரியர் மீது சுமத்தக்கூடாது- மடு வலய கல்விப்பணிப்பாளர் ஏ.ஜே.குரூஸ்.
மாணவர்களின் முழுச்சுமைகளையும் தற்போது ஆசிரியர்களே சுமப்பதாகவும் பெற்றோர்கள் இன்று பிள்ளைகளில் அக்கறையின்றி செயற்பட்டு வருவதாகவும் இதனால் மாணவர்களின் எதிர்காலம் இன்று கேல்விக்குறியான நிலையில் இருப்பதாக மடு வலய கல்விப்பணிப்பாளர் ஏ.ஜே.குரூஸ் தெரிவித்தார்.
மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மன்-ஆண்டான்குளம் ம.வி பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு மற்றும் பாடசாலையின் முகப்பு திறப்பு விழா ஆகியாவை நேற்று புதன் கிழமை(10-10-2012) இடம் பெற்ற போது விருந்தினராககாகலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மடு வலய கல்விப்பணிப்பாளர் ஏ.ஜே.குரூஸ் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,
பெற்றோர்கள் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புகின்றனர்.அன்றைய காலத்தில் காலை முதல் மாலை வரை மாணவர்கள் ஆசிரியர்களின் வழிநடத்தல்களின் கிலே செயற்பட்டு வந்தனர்.இன்றும் அவ்வாரே இடம் பெறுகின்றது.
-அதற்காக தற்போது மாணவர்களின் முழுச்சுமையினையும் ஆசிரியர்கள் சுமக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அந்த நிலை தளர்த்தப்பட வேண்டும்.பெற்றோர்கள் மாணவர்களின் நலனில் அக்கரையுடன் செயற்பட வேண்டும்.
பாடசாலை முடிவடைந்து வீடு திரும்பும் மாணவர்கள் மாலை நேரங்களிலும்,பாடசாலை விடுமுறை தினங்களிலும் எங்கு செல்லுகின்றார்கள்,என்ன செய்கின்றார்கள் என்ற விடையத்தை பெற்றோரே அவதானிக்க வேண்டும்.இந்த நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் செயற்பட முடியாது.
இன்றைய காலத்து மாணவர்களின் நடவடிக்கைகள் மிகவும் மோசமனதாக காணப்படுகின்றது.தற்போது மடு கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் கையடக்கத்தொலைபேசியின் பாவனை அதிகரித்துள்ளது.
அதனால் அந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிப்படைகின்றது.அதற்கு முழுப்பொறுப்பு கூறவேண்டியவர்கள் பெற்றோர்களே .
அவர்கள் கையடக்கத்தொலைபேசிகளை பயண்படுத்தி என்ன செய்கின்றார்கள்?யாருடன் கதைக்கின்றார்கள் என்ற விடையத்தை ஆசிரியர்கள் கண்கானிக்க முடியாது.
மாறாக அதனை கேட்டவுடன் வேண்டிக்கொடுக்கும் பெற்றோர்களே கண்கானிக்க முடியும்.
எனவே மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் தம்மை முழுமையாக அர்ப்பணம் செய்துள்ள ஆசிரியர்கள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும். ஒரு ஆசிரியரினால் மாணவர் ஒருவரின் தலைவிதியை நினைத்தபடி மாற்ற முடியும்.
எனவே பாடசாலை செல்லும் மாணவர்களின் முழுச்சுமையையும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மீது சுமத்தாது பெற்றோர்களும் தமது பிள்ளைகளின் அக்கறையில் செயற்பட்டால் எமது எதிர்பார்ப்புக்கள் நிறைவடையும் என மடு வலய கல்விப்பணிப்பாளர் ஏ.ஜே.குரூஸ் மேலும் தெரிவித்தாh.
மாணவர்களின் முழுச்சுமைகளையும் பெற்றோர்கள் ஆசிரியர் மீது சுமத்தக்கூடாது- மடு வலய கல்விப்பணிப்பாளர் ஏ.ஜே.குரூஸ்.
Reviewed by NEWMANNAR
on
October 11, 2012
Rating:
No comments:
Post a Comment