மன்னாரில் நடைபெற்ற புரட்டாதிப் பௌர்ணமி விழா
வடமாகாணக் கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்ட புரட்டாதிப் பௌர்ணமி விழா மிகக் கோலாகலமாக மன்னார் நகரசபை மண்டபத்தில் 29.09.2012 சனிக்கிழமையன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது.
இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக பேராசிரியர்களாகத் திகழும் மன்னாரின் மைந்தர்களான வங்காலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் அ.சிலுவைதாசன் அவர்களும் எருக்கலம்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் எஸ். எச். ஹஜ்புல்லாஹ் அவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் மன்னார் வலயப் பாடசாலைகளில் இயல், இசை, நாடகம் என முத்தமிழ் நிகழ்வுகளும் நடைபெற்றன.
மன்னாரில் நடைபெற்ற புரட்டாதிப் பௌர்ணமி விழா
Reviewed by NEWMANNAR
on
October 02, 2012
Rating:

No comments:
Post a Comment