இந்து மாணவர்கள் தமது சமய சின்னங்களை அணிய தடை! இந்து மகாசபை கவலை
இது மாணவர்களினது அடிப்படை மனித உரிமை மீறல் என்பதுடன் சமய வழிபாட்டிற்க்கும் பங்கம் உண்டாக்கும் ஒரு செயலாகும் என சுட்டிக்காட்டியுள்ள இந்து மகாசபை இத்தகைய செயலகள் நிறுத்தப்பட வேண்டியது அத்தியாவசியமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற இந்து மகாசபையின் கலந்துரையாடலிலேயே இவ்வாறு கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இவ் கலந்துரையாடலில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
ஒவ்வொரு மனிதாகளுக்குத் தமது மத சுதந்திரத்தைப் பேணவும் பாதுகாக்கவும் அரசியல் யாப்பின் பிரசாரம் பாதுகாப்பும் உரிமையும் உண்டு இதனை தடுக்கும் வகையில் கலவி புலத்தில் உளள் ஒரு சில பாடசாலைகள் மறுத்து வருகின்றன.
இது மாணவாகளுக்கு இடையே மத நம்பிக்கையை சீர்குலைப்பதுடன் மனதளவில் தாக்கத்தையும் உண்டு பண்ணக் கூடியதாகும். இந்த வகையில் மாணவர்களின் சமய செற்பாடுகளை தடை செய்வது பிழையான செயலாகும்.
இது மாணவாகளுக்கு இடையே மத நம்பிக்கையை சீர்குலைப்பதுடன் மனதளவில் தாக்கத்தையும் உண்டு பண்ணக் கூடியதாகும். இந்த வகையில் மாணவர்களின் சமய செற்பாடுகளை தடை செய்வது பிழையான செயலாகும்.
இத்தகைய செலகளில் ஈடுபடும் பாடசாலைகள் எதிர் காலத்தில் இத்தகைய தடை நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இது சம்பந்தமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிடும். என தெரிவிக்கப்பட்டது
இந்து மாணவர்கள் தமது சமய சின்னங்களை அணிய தடை! இந்து மகாசபை கவலை
Reviewed by NEWMANNAR
on
October 02, 2012
Rating:
No comments:
Post a Comment