மன்னாரில் விவகாரத்துச் செய்யும் இளம் பெண்களின் தொகை அதிகரிப்பு.

மன்னார் மாவட்டத்தில் திருமணமான குடும்பங்களில் பல குடும்பங்களில் தொடர்ந்தும் கணவன்,மனைவிக்கு இடையில் சண்டைகளும்,தேவையற்ற பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகின்றது.
குறித்த பிரச்சினைகள் அதிகளவில் இளம் குடும்பங்களுக்கிடையிலேயே ஏற்பட்டு வருகின்றது. கனவன் மது அருந்திய நிலையில் வீடுகளுக்குச் செல்லும் போது கணவன்,மனைவிக்கு இடையில் சண்டையும்,பிரச்சினைகளும் ஏற்படுகின்றது. இதனால் பிள்ளைகள் பாதிக்கப்படுவதோடு வீட்டில் வறுமை தாண்டவமாடுகின்றது.
இந்த நிலையில் கணவனின் அட்டகாசத்தை தாங்கிக்கொள்ள முடியாத திருமணமான இளம் குடும்பப்பெண்கள் பலர் விவகாரத்துச் செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் மன்னார் பெண்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மன்னாரில் விவகாரத்துச் செய்யும் இளம் பெண்களின் தொகை அதிகரிப்பு.
Reviewed by NEWMANNAR
on
October 02, 2012
Rating:

No comments:
Post a Comment