மன்னார் தினச்சந்தை வியாபார நிலையத்தை வாராந்த சந்தையாக மாற்றும் நடவடிக்கையில் மன்னார் நகர சபை தாமதம்-மக்கள் விசனம்.
மன்னார் தினச்சந்தை வியாபார நிலையத்தை வாராந்த சந்தையாக மாற்றும் நடவடிக்கைகளில் மன்னார் நகர சபை ஈடுபட்டு வருகின்ற போதும் குறித்த நடவடிக்கை இது வரை பூர்த்தி செய்யப்படவில்லை என மன்னார் மக்களும், வியாபாரிகளும் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் தினச்சந்தை வியாபார நிலையத்தில் 40 இற்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் சுமார் 6 வியாபாரிகலே மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தர்கள்.
ஏணையவர்கள் அணைவரும் மட்டக்களப்பு,காத்தாண்குடி பகுதிகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மன்னார் தினச்சந்தை வியாபார நிலையம் கடந்த மார்ச் மாதம் 01 ஆம் திகதி(01-03-2012) அதிகாலை தீ வைத்து கொழுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
எனினும் குறித்த சந்தை தொகுதியில் உள்ள சுமார் 5 வியாபார நிலையங்களைத்தவிர ஏணைய அணைத்தும் எரிந்து சாம்பளாகியது. குறித்த தீ சம்பவம் மின் ஒழுக்கின் காரணமாக இடம் பெற்றதா அல்லது திட்டமிட்ட செயலா? எனபது இது வரை வெளியாகவில்லை.
ஆனால் குறித்த வர்த்தகர்கள் மன்னார் நகரசபை தம்மை வெளியேற்ற முடியாத நிலையில் திட்டமிட்டு மேற்கொண்ட சதி என தெரிவித்து கடந்த மார்ச் மாதம் 01 ஆம் திகதி காலை மன்னார் பஸார் பகுதியில் மன்னார் நகர சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதோடு ஆர்ப்பாட்டமாக சென்று மன்னார் நகர சபை மீது கல் வீசி தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த செயற்படுகளில் அதிகலவில் ஈடுபட்டவர்கள் மட்டக்களப்பு மற்றம் காத்தான் குடி பகுதிகளைச் சேர்ந்த வர்த்தகர்கலேயாவர்.
தற்போது மீண்டும் குறித்த தினச்சந்தை வியாபார நிலையத்தை இராணுவம் மற்றும் உயரதிகாரிகள் இணைந்து புனர் நிர்மானம் செய்து தற்போது மீண்டும் குறித்த தினச்சந்தை வியாபார நிலைத்தினுள் குறித்த வியாபாரிகளது வியாபார நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் மன்னார் நகர சபை குறித்த வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், நீதிமன்றத்தில் வளக்குத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறி பல மாதங்களை கடக்கின்ற போதும் இது வரை எவ்வித நடவடிக்கையும் இடம்பெறவில்லை என மன்னார் வியாபாரிகளும், மக்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
தற்போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல தமிழ்,முஸ்ஸிம் வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கைகளை மன்னார் பஸார் பகுதியில் நடைபாதை வியாபாரமாக மேற்கொண்டு வந்தனர். தற்போது குறித்த வியாபாரிகளுக்கு வியாபார நடவடிக்கையில் ஈடுபட மன்னார் நகர சபை தடை விதித்துள்ளது.
இதனால் குறித்த வியாபாரிகளின் குடும்பங்கள் பட்டினிச்சாவை எதிர் நோக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே மன்னார் நகர சபை காலத்தை கடத்தாமல் மன்னார் தினச்சந்தையை உடன் வாராந்த சந்தையாக மாற்றி அணைத்து வியாபரிகளுக்கும் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கமாறு மன்னார் வியாபாரிகளும், மன்னார் மக்களும் நகர சபையிடம் வேண்டு கோள் விடுக்கின்றனர்.
மன்னார் தினச்சந்தை வியாபார நிலையத்தை வாராந்த சந்தையாக மாற்றும் நடவடிக்கையில் மன்னார் நகர சபை தாமதம்-மக்கள் விசனம்.
Reviewed by NEWMANNAR
on
October 02, 2012
Rating:

No comments:
Post a Comment