பிரிவு ~(கவிதை)
விழுந்த தூசி போல
தினமும் உறுத்தும்
உன் நினைவுகள்
நெஞ்சுக்குள்
புதைந்த ஞாபகங்கள்
இன்னும் தான்
துளிர் விட்டு தழைக்கிறது
எத்தனை
வருஷங்கள் போயாச்சு
மறக்க முடியாத
உன் வார்த்தைத் துளிகள்
கலவரங்களில்
கலைந்து போன
உறவுக்கூட்டம் போல
நானும்,நீயும் ஆகிநின்றோம்
எனக்கும்
உனக்கும் பிரிவு
மட்டும் தான்
கொஞ்சத் தூரமடி.
*வனிதாச்சந்துரு*
பிரிவு ~(கவிதை)
Reviewed by NEWMANNAR
on
October 20, 2012
Rating:

1 comment:
கவிதை நன்றாக இருக்கிறது..
நன்றி.
www.padugai.com
Post a Comment