மன்னாரின் ஒல்லாந்தர் காலத்தில் அமைக்கப்பட்ட 'கோட்டை'யின் புனர் நிர்மானிப்பு பணிகள் ஆரம்பம்-பட இணைப்பு.
ஒல்லாந்தர் காலத்தில் அமைக்கப்பட்ட மன்னார் 'கோட்டை'யை புனர் நிர்மானம் செய்வதற்காண நடவடிக்கைகள் இன்று புதன் கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
-மன்னார் நுலைவாயில் பகுதியில் அமைந்துள்ள ஒல்லாந்தர் காலத்தில் அமைக்கப்பட்ட குறித்த கோட்டை கடந்த காலங்களில் அதியுயர் பாதுகாப்பு வலையமாக காணப்பட்டது.
இதன் போது இங்கு இராணுவத்தினர் நிலை கொண்டு இருந்தனர்.இதன் போது குறித்த கோட்டை ஒரு ஆட்லரி தளமாகவும் இராணுவத்தினர் பயண்படுத்தி வந்தனர்.
இதன் போது இங்கு இராணுவத்தினர் நிலை கொண்டு இருந்தனர்.இதன் போது குறித்த கோட்டை ஒரு ஆட்லரி தளமாகவும் இராணுவத்தினர் பயண்படுத்தி வந்தனர்.
யுத்தம் முடிவடைந்த நிலையில் தற்போது குறித்த கோட்டை பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் அகற்றப்பட்டனர்.
தற்போது குறித்த கோட்டையை பார்வையிடுவதற்காக தென்பகுதி மற்றும்,வெளி நாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வந்தவன்னமுள்ளனர்.
இந்த நிலையில் புராதான சொத்தாக கருதப்படும் ஒல்லாந்தர் காலத்தில் அமைக்கப்பட்ட குறித்த கோட்டை நாளுக்கு நாள் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த கோட்டையினை புனர் நிர்மானம் செய்யும் முகமாக முதற்கட்ட பணிகள் இன்று புதன் கிழமை காலை இடம் பெற்றது.
தொல்பொருள் அமைச்சு,இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவு,இராணுவத்தின் 543 ஆவது படைப்பிரிவு,இராணுவத்தின் 23 ஆவது கமுனு படைப்பிரிவு,இராணுவத்தின் 19 ஆவது விஜயபாகு படைப்பிரிவு ஆகியவை இணைந்து குறித்த பணியினை ஆரம்பித்தனர்.
குறித்த ஆரம்ப நிகழ்வில் இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி பிரிக்கேடியர் மைத்திரி டயேஸ்,இராணுவத்தின் 543 ஆவது படைப்பிரிவு அதிகாரி ராமநாயக்க ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரின் ஒல்லாந்தர் காலத்தில் அமைக்கப்பட்ட 'கோட்டை'யின் புனர் நிர்மானிப்பு பணிகள் ஆரம்பம்-பட இணைப்பு.
Reviewed by NEWMANNAR
on
October 03, 2012
Rating:
No comments:
Post a Comment