அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மகுடம் செய்திமடல் வெளியீடு

மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தின் செய்திமடலான மகுடம் சஞ்சிகையின் முதல் இதழானது கடந்த 29.09.2012 அன்று புரட்டாதி பௌர்ணமி விழாவில் வெளியிடப்பட்டது.



 இச்சஞ்சிகையானது மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.எம்.சியான் அவர்களால் வெளியிடப்பட்டது. 

இதன் முதல் பிரதியானது மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளர் திரு மு.இராதாக்கிருஷ்ணன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இச்செய்திமடலானது ஒவ்வொரு தவணையும் வெளிவரவுள்ளதுடன் மன்னார் வலயத்தில் நடைபெறும் செயற்பாடுகள் மற்றும் சாதனைகள் , முக்கிய நிகழ்வுகள் என்பவற்றைத் தாங்கி வெளிவரவுள்ளது. 

மன்னார் வலயப் பாடசாலைகளில் இடம் பெறும் முக்கிய நிகழ்வுகள் பற்றிய விபரத்தினை  பதிப்பாசிரியர் ,மகுடம் செய்திமடல் ,வலயக்கல்வி அலுவலகம் ,மன்னார்  என்ற முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் அவற்றை இச்செய்தி மடலில் பிரசுரிக்க  முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் மகுடம் செய்திமடல் வெளியீடு Reviewed by NEWMANNAR on October 03, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.