மன்னார் மீனவர்களுக்கு அதிகளவில் பிடிபடும் முள்ளிச்சங்கு,அட்டை.
மன்னார் மீனவர்களுக்கு கடல் அட்டை மற்றும் முள்ளிச்சங்கு என்பன தாராளமாக பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளதாக மன்னார் மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் கடலட்டை மற்றும் முள்ளிச்சங்கு போன்றவை
அகழ்வதற்காண அணுமதி மறுக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு அசெகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
பல வருடங்கலாக மன்னார் மாவட்டத்தில் மீனவர்களுக்கு குறித்த தடை காணப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மீன் பிடி குறைந்த நிலையில் காணப்படுவதினால் மீனவர்கள் தமது வருவாயை ஈட்டிக்கொள்வதில் பெரும் இன்னல்களை எதிர் நோக்கினர்.இந்த நிலையில் தற்போது குறித்த அணுமதி கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது முள்ளிச்சங்கின் சதை அதிகரித்த விலையில் காணப்படுகின்றது.ஒரு கிலோ முள்ளிச்சங்கின் விலை 1500 ரூபாய் தொடக்கம் 2 ஆயிரம் ரூபாய் வரை செல்கின்றது.
இந்த நிலையில் தற்போது மன்னார் மாவட்ட மீனவர்கள் முள்ளிச் சங்கை எடுக்கும் நடவடிக்ககையில் ஈடுபட்டுள்ளனர்.இதன் போது அதிகலவில் கடலட்டைகளும் பிடிக்கப்படுகின்றது.
-தற்போது மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டத்திற்கும்,வெளிநாடுகளுக்கும் கடலட்டை மற்றும் முள்ளிச்சங்கின் சதை போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
-முள்ளிச்சங்கை குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்கு மட்டுமே அதிகளவில் பெற்றுக்கொள்ள முடியும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு கடற்படையினரால் வழங்கப்படும் பாஸ் நடைமுறை அமுலில் உள்ள போதும் மீனவர்கள் கடற்படையினரின் கெடுபிடிகள் அற்ற நிலையில் தொழிலுக்குச் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்
மன்னார் மீனவர்களுக்கு அதிகளவில் பிடிபடும் முள்ளிச்சங்கு,அட்டை.
Reviewed by NEWMANNAR
on
October 11, 2012
Rating:

No comments:
Post a Comment