மன்னாரில் கழிவு நீர் வாய்க்கால் துப்பரவு செய்யும் பணி ஆரம்பம்.
மன்னார் நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற கழிவு நீர் வாய்க்கால்களினை துப்பரவு செய்யும் பணியில் மன்னார் நகர சபையின் சுற்றிகரிப்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த வாய்க்கால்கள் உரிய முறையில் பராமறிக்கப்படாமலும்,குறித்த வாய்க்காலினுள் மண்,குப்பை,கற்கல் போன்றவை காணப்பட்டமையினால் குறித்த வாய்க்காலினுடாக கழிவு நீரை வெளியேற்ற முடியாத நிலை காணப்பட்டது.
-மக்கள் குறித்த கழிவு நீர் வாய்க்காலினை உரிய முறையில் பராமரிக்காமல் இருந்தமையினாலும்,குப்பைகளை குறித்த வாய்க்காலினுள் கொட்டியதன் காரணத்தினாலும் கழிவு நீர் வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் மன்னார் நகர நபையின் சுத்திகரிப்பு பணியாளர்கள் குறித்த கழிவு நீர் வாய்க்கால்களினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த வேலைத்திட்டம் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் கழிவு நீர் வாய்க்கால் துப்பரவு செய்யும் பணி ஆரம்பம்.
Reviewed by NEWMANNAR
on
October 06, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment