முள்ளிக்குளம் மக்களின் அவலம் தொடர்கின்றது.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்களம் கிராம மக்கள் குடியமர்ந்து பல மாதங்களை கடக்கின்ற போதும் அந்த மக்கள் அடிப்படை வசதி எவையுமின்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மக்கள் முள்ளிக்குளம் கிராமத்திற்கு அருகில் உள்ள மலங்காடு எனும் காட்டுப்பிரதேசத்தினுள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த மக்களுக்கு தேவையான அவசர உதவிகளை அப்பகுதியில் நிலை கொண்டுள்ள கடற்படையினர் வழங்கி வருகின்றனர்.
எனினும் அந்த மக்கள் தற்போது தற்காலிக கொட்டில்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
அடர்ந்த காடு என்பதினால் யானை உற்பட விசப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்த நிலையில் உள்ளது.
தற்போது மழைக்காலமாக உள்ளமையினால் அந்த மக்கள் அமைத்துள்ள தற்காலிக கொட்டில்கள் தாக்குப்பிடிக்குமா?என்ற அச்சத்தில் அந்த மக்கள் உள்ளனர்.
இதே நேரம் அடிப்படை வசதிகள் எவையும் இல்லாத காரணத்தினால் அந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.
-குறிப்பாக சிறுவர்கள்,வயோதிபர்கள்,பெண்கள் ,ஆண்கள் என அணைவரும் அங்கு இருப்பதினால் அங்கு அடைப்படை வசதிகள் எவையும் இல்லாததினால் அணைத்து மக்களும் பாதீக்கப்பட்டுள்ளனர்.
எனவே திணைக்கள அதிகாரிகள் எமது அவல வாழ்வை நேரில் வந்து பார்த்து கூட இது வரை எமக்காண அடிப்படை வசதிகள் எவையும் செய்து தரவில்லை என அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முள்ளிக்குளம் மக்களின் அவலம் தொடர்கின்றது.
Reviewed by NEWMANNAR
on
October 06, 2012
Rating:

No comments:
Post a Comment