மன்னாரில் விவசாயத் துறையை மேம்படுத்த நிதி உதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்!
மன்னார் மாவட்டத்தில் விவசாய துறையை மேம்படுத்துவதற்கு ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் வகையில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்மைய மன்னார் மாவட்டத்தின் ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 700 விவசாய குடும்பங்களுக்கு விவசாய உபகரணங்கள், மரக் கன்றுகள் மற்றும் விதை நெல் ஆகியன விநியோகிக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
.jpg)
மன்னார் மாவட்டத்தில் மேலதிக பயிர்ச்செய்கையை மேற்கொள்வது தொடர்பாக விவசாய அமைச்சு ஏற்கனவே ஆயிரத்து 450 செயலமர்வுகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் விவசாயத் துறையை மேம்படுத்த நிதி உதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்!
Reviewed by NEWMANNAR
on
October 05, 2012
Rating:

No comments:
Post a Comment