முசலி பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் பாரிய மோசடி.பாதீக்கப்பட்ட மக்கள் அமைச்சர் றிஸாட் பதீயூதினுக்கு மகஜர் அனுப்பி வைப்பு
முசலி பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் நிர்வாக சீர்கேடுகள் குறித்து முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை கிராம மக்களும்,நலன் விரும்பிகளும் இணைந்து கையோப்பமிட்டு 01-10-2012 திகதியிடப்பட்ட மகஜர் ஒன்றை கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஸாட் பதீயுதீன் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அனுப்பி வைத்துள்ள குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
மேற்படி முசலி பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் நிர்வாக சீர்கேடுகள் குறித்து மன்னார் கூட்டுறவு உதவி ஆணையாளர்,முசலி பிரதேசச் செயலாளர் ஆகியோரிடம் பல தடவை பல முறைப்பாடுகள் செய்துள்ளோம்.இருந்தும் இது வரை எவ்வித மாற்றமும் இடம் பெறவில்லை.
இதனால் மீண்டும்,மீண்டும் பொதுமக்களாகிய நாங்கள் பாதீக்கப்பட்டு வருவதோடு நியாயம் கேட்கும் பணியாளர்கள் பதவிக்குறைப்பு,எச்சரிக்கை போன்ற தண்டனைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.
நாம் பிரதேச செயலாளரை இவ்விடையம் தொடர்பில் சந்தித்த போது தன்னால் இயன்றவறை மேலிடங்கள் எல்லாவற்றிற்கும் தெரிவித்து விட்டதாகவும்,இவ்விடையம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கூட்டுறவு திணைக்கள உதவி ஆணையாளர்,சங்கத்தலைவரின் கைப்பொம்மையாக செயற்படுவதினால் தன்னால் இதற்கு மேலாக ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி,தான் அனுப்பிய கடிதங்களையும் எமக்கு காண்பித்தார்.
இது மட்டுமின்றி திணைக்களத்திற்கான அமைச்சின் செயலாளராக தற்போது ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்,மா வட்டத்தை நன்கு அறிந்தவர் எனவும் தெரியத்தந்ததால் இறுதி முயற்சியாக கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரினுடாக தங்களிடம் மன்றாட்டாக பின்வரும் விடையங்களை சமர்ப்பித்து தீர்வை எதிர்பார்த்து நிற்கின்றோம்.
சர்வதிகாரப் போக்குடைய தலைமைத்துவத்தை நீக்கி ஜனநாயக ரீதியான தலைமைத்துவத்தை நியமித்தல்,தலைவருக்கும்,கூட்டு றவு அபிவிருத்தி உதவி ஆணையாளருக்கும் இடையில் உள்ள இரகசிய தொடர்பு என்ன? பிரதேச செயலாளர்-அரசாங்க அதிபர் ஆகியோறின் கடிதங்களுக்கு நேரடி உத்தியோகஸ்தரான கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரினால் நடவடிக்கை எடுக்க முடியாமைக்காண காரணம் என்ன?,
தலைவரினால் தனிநோக்குடன் செய்யப்படும் கொள்வனவு,சொந்த ஊரில் தனியாரிடம் பல இலட்சம் ரூபாய் பெருமதிக்கு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதும்,கிளைகளில் விற்க முடியாது தேங்கி கிடக்கும் பொருட்களும்,அரசாங்க அதிபரின் முற்பணத்தில் கொள்வணவு செய்யப்பட்ட நெல் எப்படி விற்கப்பட்டது,நெல் விற்ற பணம் எங்கே?
,தலைவரின் கையில் நீண்ட நாட்களாக காசோலை இருப்பதற்காண காரணம் என்ன?,குற்றம் நிரூபிக்கப்பட்ட கிளை முகாமையாளர்கள் 2011 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தண்டிக்கப்படாததற்காண காரணம் என்ன?,
நியாயம் கோரும் பணியாளர்கள் தலைவரினாலும்,கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரினாலும் எச்சரிக்கப்படுவது ஏன்?,ஜனநாயக ரீதியான கிளைக்குழுவினை தெரிவு செய்வதற்கு தலைவரும்,கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரும் கூட்டுச் சேர்ந்து காலம் இழுத்தடிப்பதற்காண காரணம் என்ன?,தலைமைக்காரியாலய காசாளரிடம் கை மாற்றாத தலைவர் காசு மாறுவது சரியா?,
நிவாரண பொருட்கள் வினியோகத்தில் ஏற்படும் குறைகளை அல்லது தவறுகளை சுட்டிக்காட்டியும்,உதவி கூட்டுறவு ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என்ற கேள்விகளை பாதீக்கப்பட்ட மக்கள் எழுப்பியுள்ளனர்.
தலைவருக்கும்,கூட்டுறவு உதவி ஆணையாளருக்கும் இடையில் உள்ள இறுக்கமான உறவே இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.
எனவே இவ்விடையங்களை மட்டுமல்லாது இதற்கு மேலான விடையங்களையும் கருத்தில் கொண்டு வரிய மக்களாகிய எங்களின் வயிற்றில் அடிக்கும் தலைவரும்,அவருக்கு உடந்தையாக இருக்கும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் மீதும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு எமது பசியை போக்குமாறு மன்றாட்டாக கேட்டு நிற்கின்றோம்.என சிலாபத்துறை கிராம மக்களும்,நலன் விரும்பிகளும் இணைந்து கையோப்பமிட்டு கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஸாட் பதீயுதீன் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முசலி பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் பாரிய மோசடி.பாதீக்கப்பட்ட மக்கள் அமைச்சர் றிஸாட் பதீயூதினுக்கு மகஜர் அனுப்பி வைப்பு
Reviewed by NEWMANNAR
on
October 03, 2012
Rating:

No comments:
Post a Comment