மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கும் மாடு அறுக்கும் கொள்கலனை மூட தீர்மானம்
மன்னார், உப்புக்குளத்தின் கோந்தைப்பிட்டியிலுள்ள மாடுகளை இறைச்சிக்காக வெட்டப்படும் கொள்கலம் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதாக அதிகாரிகளும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் என்.குணசீலனிடம் கேட்டபோது, இக்கொள்கலம் ஒரு வருடத்துக்கும் மேலாக சுகாதார சீர்கேட்டுடனும் தகுதியற்றதுமாகக் காணப்படுகின்றது.
இது தொடர்பில் நான் பல தடவைகள் மன்னார் நகரசபைக்கு தெரியப்படுத்தினேன். இந்நிலையில், 2 தடவைகள் இக்கொள்கலனில் இறைச்சி வெட்டப்படுவது தடை செய்யப்பட்டிருந்தது.
பின்னர் மன்னார் நகரசபை அங்கு புதிதாக கொள்கலத்தை குறைந்த காலத்தினுள் திறப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாக கிடைத்த தகவலையடுத்து, பொதுமக்களின் தேவைக்காக மட்டுப்படுத்தப்பட்டளவு இறைச்சியை வெட்ட நாங்கள் அனுமதியை வழங்கினோம். ஆனால் புதிதாக அமைக்கப்பட்டுவரும் கொள்கலன் பணி பூர்த்தியாகமலுள்ளது. எனவே, சுகாதார திணைக்களத்தினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையின்படி, சுகாதார சீர்கேட்டுடன் இயங்கும் இக்கொள்கலனில் மாடு வெட்டப்படுவதை நிறுத்த தீர்மானித்துள்ளோமெனக் கூறினார்.
மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கும் மாடு அறுக்கும் கொள்கலனை மூட தீர்மானம்
Reviewed by NEWMANNAR
on
October 14, 2012
Rating:

No comments:
Post a Comment