அண்மைய செய்திகள்

recent
-

கலைஞர் குழந்தையின் கலைப் பணி நயப்பு மலர் வெளியீட்டு விழா-பட இணைப்பு.,

தமிழில் கலை இலக்கியப் படைப்புக்கள் பெற்ற முக்கியத்துவத்தை படைப்பாளிகள் பெறவில்லை
கலைஞர் குழந்தையின் கலைப் பணி நயப்பு மலர் வெளியீட்டு விழாவில் தமிழ் நேசன் அடிகளார் கருத்து
  அன்று தொடக்கம் இன்றுவரை வராற்றுப் பதிவுகளை மேற்கொள்வதில் நமது தமிழ்ச் சமூகம் அதிக அக்கறை காட்டவில்லை என்பதை நாம் கவலையோடு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
அதன் விளைவு இன்று நமது வரலாறுகள் மறைக்கப்படுகின்றனளூ அல்லது திரித்துக்கூறப்படுகின்றன. தமிழில் கலை இலக்கியப் படைப்புக்கள் பெற்ற முக்கியத்துவத்தை கலை இலக்கியப் படைப்பாளிகள் பெறவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சங்க காலம் தொடக்கம் இன்றுவரையும் பெரும்பாலும் இதுதான் நிலைமை என அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.
 கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.10.2012) முருங்கனில் இடம்பெற்ற கலைஞர் குழந்தையின் கலைப்பணி நயப்பு மலரான 'கலைத்தவசி' என்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்கி உரையாற்றும்போதே மன்னார் தமிழ்ச் சங்கம், மன்னார் சர்வமத அமைப்பு ஆகியவற்றின் தலைவரும், கலையருவி அமைப்பின் இயக்குனருமாகிய தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
  அங்கு அடிகளார் மேலும் தெரிவித்ததாவது, உலகத்தின் கவனத்தைக் கவர்ந்த ஒப்பற்ற தமிழ் இலக்கியமாகிய திருக்குறள் பெற்ற முக்கியத்துவத்தை திருவள்ளுவர் பெறவில்லை. திருவள்ளுவர் எத்தனையோ விடயங்களைப்பற்றி எவ்வளவோ எழுதிவைத்தார். ஆனால் தன்னைப்பற்றி எதையுமே அவர் எழுதிவைக்கவில்லை. அவர் காலத்தில் வாழ்ந்த மற்றவர்களும் திருவள்ளுவரைப்பற்றி எந்தக் குறிப்பையும் எழுதிவைக்கவில்லை. இதனால் திருவள்ளுவரைப்பற்றிய ஒருசில 'கட்டுக்கதைகள்'தான் ஆங்காங்கே உள்ளன. இந்த நிலைமைதான் பெரும்பாலான புலவர்கள், கவிஞர்கள், கலைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளன. கலைஞர் செபமாலை குழந்தையினது வாழ்வையும், பணியையும் பதி;வுகளாக்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட இந்த முயற்சியின் முக்கியத்துவத்தை தமிழ் கலை இலக்கிய வரலாற்றுப் பின்புலத்திலிருந்து நோக்கினால்தான் புரிந்துகொள்ள முடியும்.
 எனவே இன்று நம் மத்தியில் வாழும் கலைஞர்கள், புலவர்கள், விற்பன்னர்கள், ஆற்றல் வாய்ந்தவர்கள் போன்றோரின் வாழ்வையும் பணியையும் பதிவுசெய்வது, ஆவணப்படுத்துவது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
  கலைஞர் குழந்தை ஓர் கரு (கலை) மேகம்! கடந்த நாற்பது ஆண்டுகளாக மழைபொழிந்த இந்த மேகம் இன்று ஓய்வுகண்டுள்ளது. கலைஞர் குழந்தை ஓர் நதி! இடையறாத பாய்ச்சலாக ஓடிக்கொண்டிருந்த அந்த நதி இன்று தேக்கம் கண்டுள்ளது. அதேவேளை அந்த மேகம் மழைபொழிந்த இடங்கள், அந்த நதி பாய்ந்து பரவிய இடங்கள் இன்று செழிப்புற்று பலன் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.
   காலம் தன் கடமையைச் சரிவரச்செய்துகொண்டிருக்கின்றது. இலட்சிய வேட்கையோடு இடையறாது இயங்கிக்கொண்டிருந்த பலர் காலத்தின் கட்டளைக்குப் பணிந்து சாய்வு நாற்காலியில் ஓய்ந்துகிடக்கின்றார்கள். கலைஞர் குழந்தையும் அந்த வரிசையில் இணைந்துவிட்டார்.
  கலைஞர் குழந்தை அவர்களின் கலை உலக வாழ்வைப் பதிவுசெய்வதென்பது இன்றைய காலத்தின் முக்கிய தேவையாகும். அவருடைய வாழ்வும் பணியும் ஒரு திறந்த புத்தகமாக உள்ளது. இதிலிருந்து இன்றைய இளம் சந்ததியினர் பல வாழ்க்கைப் பாடங்களைப் படிக்கலாம் என தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.
   முருங்கனைச் சேர்ந்த கலைஞர் செபமாலை குழந்தை அவர்களின் கலையுலக வாழ்வைப் பற்றி, அவரின் பணிகளைப்பற்றி அவரை அறிந்த பேராசிரியர்கள், கல்விமான்கள், கலையுலக நண்பர்கள், சகபாடிகள், உறவினர்கள் போன்றவர்களிடமிருந்து பெறப்பட்ட கட்டுரைகள், அனுபவப் பகிர்கவுகள் போன்;றவற்றை உள்ளடக்கி அவருடைய மகன் அருட்திரு. அன்புராசா அவர்கள் 'கலைத்தவசி' என்ற பெயரில் 300 பக்கங்களைக் கொண்ட  நூலொன்றை வெளிக்கொணர்ந்துள்ளார். இந்நூலில் 100 பேர் வரை எழுதியுள்ளார்கள்.











  பேராசிரியர் சண்முகதாஸ், திருமதி மனோன்மணி சண்முகதாஸ், பேராசிரியர் விக்ரர் பிலேந்திரன் அடிகளார் என அறிஞர் பெருமக்களும் மன்னார் மண்ணின் மைந்தனும் தற்போதைய மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபருமான திரு. பத்திநாதன், மன்னார், மன்னார் வலயக் கல்விப்;பணிப்பாளர்; ஜனாப் எம். எம். சியான் மற்றும் மன்னாரைச் சேர்ந்த அரச உயர் அத்pகாரிகள் பலரும், கலையுலகைச் சார்ந்தவர்களும் இவ்விழாவிற்கு வருகை தந்திருந்தனர்.
கலைஞர் குழந்தையின் கலைப் பணி நயப்பு மலர் வெளியீட்டு விழா-பட இணைப்பு., Reviewed by NEWMANNAR on October 14, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.