அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் புத்தளம் பழைய வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

மன்னார் புத்தளம் பழைய வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக புத்தளம் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.


 கலாஓயா பெருக்கெடுத்ததை அடுத்தே இந்த வீதி மூடப்பட்டுள்ளதாகவும் வீதியில் சுமார் மூன்றடி உயரத்திற்கு வெள்ள நீர் பாய்வதாகவும் அந்நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

 இவ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் புத்தளத்திலிருந்து மன்னாருக்குப் பயணம் மேற்கொள்ளும் வாகனங்கள் அனுராதபும் மதவாச்சியினூடாக தமது பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதே போன்று மன்னாரிலிருந்து புத்தளத்திற்கு பயணிக்கும் பயணிகள் அல்லது வாகனங்கள் மாற்று வழிகளில் செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் 
மன்னார் புத்தளம் பழைய வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது Reviewed by NEWMANNAR on October 29, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.