மன்னார் நகர சபையின் செயலாளரை உடன் இடமாற்றுமாறு மன்னார் நகர சபையின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் நகர சபையின் செயலாளரை உடன் இடமாற்றுமாறு மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் வட மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளருக்கு இன்று செவ்வாய்க்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக்கொண்ட மன்னார் நகர சபை உருவாகி 17 மாதங்களை கடந்து விட்டது. ஆனால் எமது நகர சபை செயலாளரது திறமையின்மையின் காரணமாகவும் அலட்சிய போக்கிளாலும் எம்மால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் பெரும்பாலானவை செயல்படுத்தப்படாமலுள்ளதை மிக மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
அவர் பொருத்தமற்ற சாக்குப்போக்குகளை கூறி காலத்தை கடத்தி வருகின்றார். இதனால் எமது நகர சபையின் அபிவிருத்தித் திட்டங்கள் மிகவும் மந்த நிலையல் உள்ளதோடு சபைக்கு வர வேண்டிய வருமானங்களையும் இழந்து வருகின்றோம்.
குறிப்பாக முத்திரைக் கட்டணங்கள், வரிகள் மற்றும் வாடகைகள் போன்றவற்றை உரிய காலத்தில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
மேலும் மன்னார் நகர சபைக்குச் சொந்தமான அசைவற்ற ஆதனங்களின் விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியாததோடு அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள், சட்டபூர்வமற்ற கட்டிடங்களைத் தடுத்தல் என்பனவும் அசமந்த போக்கில் நடைபெறுகின்றன.
மொத்தத்தில் பெரும்பாலான நடவடிக்கைகள் செயலாளரினால் முடக்கப்படுள்ளது. எனவே தற்போதுள்ள வினைத்திறனற்ற செயலாளரை மாற்றி செயல்படக்கூடிய ஒரு செயலாளரை தந்துதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்".

Reviewed by NEWMANNAR
on
October 24, 2012
Rating:

No comments:
Post a Comment