அண்மைய செய்திகள்

recent
-

மாவீரர்களுக்கு இலங்கைப் பாராளுமன்றத்தில் அஞ்சலி

ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்த அனைத்துப் போராளிகளுக்கும் தனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று தெரிவித்தார்.



வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் போராளிகளுக்கு அஞ்சலி தெரிவித்தார். தமிழ் மக்களின் விடுதலைக்காகவே புலிகள் மற்றும் போராளிகள் ஆயுதம் ஏந்திப் போராடி தமது உயிர்களைத் தியாகம் செய்தனர்.

 இனப்பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில்தான் அவர்கள் தியாகம் செய்தனர். அப்பாவி இராணுவத்தினரும் உயிரிழந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த அனைவருக்கும் நான் எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்." என்றார் அவர். தன்னைத் தோளில் சுமந்து அழகு பார்க்கும் தனது சமூகத்துக்கான கடமையை செய்யத் தவறிவிட்டதாகத் தனது மனம் உறுத்துகின்றது என்று மிகவும் உணர்ச்சிகரமாகத் தெரிவித்தார்.

 ஈழ வேட்கையை மனத்தில் கொண்டு தமிழர் விடுதலைக்காக தம் உயிரைத் துச்சமென மதித்து வீராச்சாவைத் தழுவிக்கொண்ட போராளிகளை நினைவு கூரும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்று உலகத் தமிழர்களால் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்.
மாவீரர்களுக்கு இலங்கைப் பாராளுமன்றத்தில் அஞ்சலி Reviewed by NEWMANNAR on November 27, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.