அண்மைய செய்திகள்

recent
-

தென்பகுதி மீனவர்களின் ஆக்கிரமிப்பால் மன்னார் மீனவர்கள் தொடர்ந்தும் பாதிப்பு.

தென்பகுதி மீனவர்கள் மன்னார் சௌத்பார் கடற்பரப்பில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த மன்னார் மாவட்ட கரையோர மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக மன்னார் பனங்கட்டிக்கோட்டு மீனவ சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


 மன்னார் சௌத்பார் கடற்பரப்பில் தொழில் செய்ய ஏற்கனவே 65 தென்பகுதி மீனவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மன்னார் மாவட்டத்தில் உள்ள எந்த மீன்பிடி அமைப்புக்களினதும் அனுமதியும் இன்றி கடற்படையினர் மற்றும் இராணுவத்தின் ஆதரவுடன் நூற்றிற்கும் மேற்பட்ட தென்பகுதி மீனவர்கள் கடல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்த பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் பல்வேறு தரப்பினரிடமும் முறையிட்டுள்ளோம். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது சௌத்பார் கடற்கரை பகுதியில் அவர்கள் நிரந்தரமாக மீன் வாடிகளை அமைத்துள்ளதன் காரணத்தினால் அந்த பகுதியில் உள்ள எமது மீனவர்கள் கரை வலைத்தொழிலை செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

 குறித்த தென்பகுதி மீனவர்கள் 6 மாதங்கள் மன்னாரிலும் ஏனைய 6 மாதங்கள் அவர்களுடைய ஊரிலும் கடற்தொழிலை செய்து வருகின்றனர். இவர்களுடைய அத்துமீறிய குறித்த மீன் பிடி நடவடிக்கையினால் சின்னக்கடை,பெரிய கடை,சௌத்பார்,பனங்கட்டிக்கோட்டு,எமில் நகர்,சாந்திபுரம் உற்பட பல மீனவ கிராம மக்கள் பாதிப்படைந்து வருவதாகவும் மன்னார் பனங்கட்டிக்கோட்டு மீனவ சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
தென்பகுதி மீனவர்களின் ஆக்கிரமிப்பால் மன்னார் மீனவர்கள் தொடர்ந்தும் பாதிப்பு. Reviewed by NEWMANNAR on November 27, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.