அண்மைய செய்திகள்

recent
-

அம்பாந்தோட்டை, நுவரெலியா மக்கள் பேரவையினர் மன்னாருக்கு விஜயம்

மத்தியில் புரிந்துணர்வையும், உறவையும் கட்டி எழுப்பும் நோக்கோடு தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் அம்பாந்தோட்டை, நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த 12 பேர்கொண்ட மக்கள் பேரவை உறுப்பினர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை (21.11.2012) மன்னாருக்கு விஜயம் செய்தனர்.


இவர்கள் மடு, பூமலர்ந்தான் ஆகிய இடங்களைச் சென்று பார்வையிட்டதுடன் மக்களையும் சந்தித்து உரையாடினர். நேற்று வியாழக்கிழமை (22.11.2012) அன்று மன்னார் ஆர்.பி. ஆர். நிறுவனத்தில் மன்னார் மக்கள் பேரவையினரைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

 மன்னார் மக்கள் பேரவையின் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின்போது இன்று வடகிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும், குறிப்பாக மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் எடுத்துக்கூறப்பட்டது.

 மிகுந்த அக்கறையோடும், அவதானத்தோடும் அம்பாந்தோட்டை, நுவரெலியா மக்கள் பேரவையினர் மன்னார் பிரதிநிதிகளின் கருத்துகளுக்கு செவிமடுத்தனர். அதேவேளை தத்தமது மாவட்டங்களில் உள்ள நிலமைகள் பற்றியும் விளக்கிக்கூறினர். மன்னார் மக்கள் பேரவையின் இணைப்பாளரும் ஆர். பி. ஆர் நிறுவனத்தின் அதிகாரியுமான திரு. அரவிந்தன் அவர்கள் இக்கலந்துரையாடலுக்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார்.
அம்பாந்தோட்டை, நுவரெலியா மக்கள் பேரவையினர் மன்னாருக்கு விஜயம் Reviewed by NEWMANNAR on November 23, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.