மன்னார் மடு கல்வி வலையத்தைச் சேர்ந்த மாணவர்கள் யுத்தத்தின் பின்னரும் இலவச கல்வியை முழுமையாக பெற்றுக்கொள்ள முடியாத நிலை-பெற்றோர் கவலை.
மன்னார் மடு வலயக்கல்வி அலுவலகத்திற்குற்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் பெரிதும் பாதீப்புக்களை எதிர் நோக்கி வருவதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ் வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்கள் பலர் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இவர்கள் திங்கட்கிழமைகளில் அரை நாள் கல்வி கற்பிப்பு பாடநேரமும்,வெள்ளிக்கிழமைகளில் அரை நாளும் கல்வி கற்பிக்கும் நேரமும் தடைப்படுகின்றது. இதனால் மாணவர்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த வலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் கட்டாயக்கல்வியை கற்று வருகின்றனர்.
கல்வி நடவடிக்கைகளில் மிகவும் ஆர்வமும்,திறமைகளும் கொண்டுள்ள மாணவர்கள் யுத்தத்தின் பின் தமது கற்றல் செயற்பாடுகளை தொடர பல பிரச்சினைகளை எதிர் கொண்டனர். தற்போது குறித்த மாணவர்கள் தனியார் வகுப்புகளுக்குச் செல்ல முடியாத நிலையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.
பாடசாலைக்கல்வியை மட்டும் நம்பியுள்ள குறித்த மாணவர்கள் தற்போது ஆசிரியர்களின் வருகை பிந்துகின்றமையினாலும்,சில முக்கிய பாடங்களுக்கு சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் இல்லாமையினாலும்,குறித்த மடு கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் யுத்த சூழ்நிலையில் பின்னரும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
இவர்கள் திங்கட்கிழமைகளில் அரை நாள் கல்வி கற்பிப்பு பாடநேரமும்,வெள்ளிக்கிழமைகளில் அரை நாளும் கல்வி கற்பிக்கும் நேரமும் தடைப்படுகின்றது. இதனால் மாணவர்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த வலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் கட்டாயக்கல்வியை கற்று வருகின்றனர்.
கல்வி நடவடிக்கைகளில் மிகவும் ஆர்வமும்,திறமைகளும் கொண்டுள்ள மாணவர்கள் யுத்தத்தின் பின் தமது கற்றல் செயற்பாடுகளை தொடர பல பிரச்சினைகளை எதிர் கொண்டனர். தற்போது குறித்த மாணவர்கள் தனியார் வகுப்புகளுக்குச் செல்ல முடியாத நிலையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.
பாடசாலைக்கல்வியை மட்டும் நம்பியுள்ள குறித்த மாணவர்கள் தற்போது ஆசிரியர்களின் வருகை பிந்துகின்றமையினாலும்,சில முக்கிய பாடங்களுக்கு சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் இல்லாமையினாலும்,குறித்த மடு கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் யுத்த சூழ்நிலையில் பின்னரும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
மன்னார் மடு கல்வி வலையத்தைச் சேர்ந்த மாணவர்கள் யுத்தத்தின் பின்னரும் இலவச கல்வியை முழுமையாக பெற்றுக்கொள்ள முடியாத நிலை-பெற்றோர் கவலை.
Reviewed by NEWMANNAR
on
November 23, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment