மன்னாரில் கழிவு நீர் வாய்க்கால் சுத்தம் செய்யும் நடவடிக்கை ஆரம்பம்.- பட இணைப்பு.
மன்னார் நகர சபைக்குற்பட்ட பகுதிகளில் தற்போது குப்பை கூழங்களுடன் நிறைந்து காணப்படுகின்ற கழிவு நீர் வாய்க்கால்களை சுத்தம் செய்யும் துரித வேலைத்திட்டம் ஒன்றை மன்னார் நகர சபை தற்போது முன்னெடுத்து வருவதாக மன்னார் நகர சபையின் உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
மன்னார் நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற கழிவு நீர் வாய்க்காலினை பொது மக்கள் உரிய முறையில் பராமறிக்காத நிலையில் காணப்படுகின்றது. கழிவு நீர் வாய்க்காலினுள் குப்பை உற்பட தின்மக்கழிவுகளை கொட்டுகின்றனர்.இதனால் கழிவு நீர் வாய்க்கால் ஊடக வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது மழை பெய்துள்ளதன் காரணத்தினால் மழை நீர் மற்றும் தின்மக்கழிவுகள் ஒன்றினைந்து துர்நாற்றம் வீசி வருகின்றது. இதனால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். தற்போது மன்னாரில் டெங்கு ஒழிப்பு வேளைத்திட்டமும் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் நகர சபை தமது சுற்றிகரிப்பு பணியாளர்களை வைத்து தற்போது கழிவு நீர் வாய்க்காலினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக மன்னார் நகர சபையின் உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
November 28, 2012
Rating:
No comments:
Post a Comment