அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வாகன நெரிசல்-பாடசாலை மாணவர்கள் பாதிப்பு.

மன்னாரில் தற்போது வாகன நெரிசல் அதிகரித்துள்ளதன் காரணத்தினால் காலையிலும்,மதிய நேரத்திலும் பாடசாலை மாணவர்கள் வீதியை கடப்பதிலும்,போக்குவரத்துக்களை மேற்கொள்ளுவதிலும் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


 மன்னார் நகர் பகுதியில் ஆண்,பெண்,கலவன் பாடசாலை என பல பாடசாலைகள் அமைந்துள்ளது. இந்த பாடசாலைகளுக்கு தூர இடங்களில் இருந்தும்,அயல் கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் கல்வி கற்கச் செல்லுகின்றனர். இந்த நிலையில் பிரதான வீதிகளில் உள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் காலையில் பாடசாலைக்குச் செல்லவும் பாடசாலை முடிந்தவுடன் வீடு செல்வதிலும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

 குறித்த பிரதான வீதிகளினூடாக போக்குவரத்துக்களில் ஈடுபடுகின்ற வாகனங்களின் தொகை காலை நேரங்களில் அதிகமாக காணப்படுகின்றது. இதனால் சிறு மாணவர்கள் வீதியைக்கடக்கின்ற போது விபத்துக்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 எனினும் ஒவ்வொரு  பாடசாலைகளுக்கு முன்பும் பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னரும்,முடிவடைகின்ற போதும் மன்னார் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் தமது கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். பாடசாலைகளுக்கு முன் எவ்வித பிரச்சினைகளும் காணப்படாத போதும் மாணவர்கள் கூட்டமாக நடந்து செல்லுகின்ற போதும்,பஸ்ஸிற்காக காத்து நிற்கின்ற போதும் பல இடர்களை சந்திப்பதாக மாணவர்களுடைய பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் வாகன நெரிசல்-பாடசாலை மாணவர்கள் பாதிப்பு. Reviewed by NEWMANNAR on November 28, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.