அண்மைய செய்திகள்

recent
-

வரட்சியால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கும் உதவிகள் வழங்கப்பட வேண்டும்- மந்தை மேற்கு விவசாய அமைப்பு ஜனதிபதிக்கு கடிதம் அனுப்பி வைப்பு

வரட்சியினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு இது வரை எவ்வித உதவிகளும் வழங்கப்படாத நிலையில் விவசாயிகள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கும் உடன் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என கூறி மந்தை மேற்கு விவசாய அமைப்பின் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு நேற்று(6-11-2012) செவ்வாய்க்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.


 குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,,,, மன்னார் மாவட்டமும் நாட்டில் ஏற்பட்ட வரட்சியினால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.அதன் காரணத்தினால் சில மாவட்டங்கள் வரட்சி மாவட்டமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மன்னாரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வரை அதற்கான இழப்பீடுகள் எவையும் எமது விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

 இலங்கையிலே அதிக நெல் உற்பத்தியில் மன்னார் மாவட்டம் இரண்டாவது நிலையில் உள்ளது. மன்னாரில் கடந்த கால சிறு போகச் செய்கையில் கடுமையான வரட்சியின் காரணத்தினால் மன்னார் மாவட்டத்தில் 4642 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை முழுமையாக அழிவடைந்துள்ளது. எனவே விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக்கொண்ட எமது வறிய விவசாயிகள் பயிர் செய்கைக்கென வங்கிகளில் அடகு வைத்த தமது பொருட்களை மீள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.

 2012-2013 ஆண்டு பெரும்போக நெற்செய்கையை மேற்கொள்ள விவசாயிகள் பொருளாதார வசதியின்றி மிகுந்த சிரமப்படுகின்றனர். ஆகவே வரட்சியால் பாதிக்கப்பட்ட வடமத்திய மாகாணத்திற்கு இலவசமாக உழவும்,விதை நெல்லும் வழங்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.

 எனவே அதே போல் மன்னார் மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் இலவசமாக உழவும்,விதை நெல்லும் வழங்க வேண்டுமென கோருவதுடன் எமது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் உற்பத்தியை அதிகரிக்க ஊக்குவிப்பதற்கும் எமது விவசாய மக்களுக்கு உதவுவீர்கள் என தயவுடன் எதிர்பார்க்கின்றோம்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரட்சியால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கும் உதவிகள் வழங்கப்பட வேண்டும்- மந்தை மேற்கு விவசாய அமைப்பு ஜனதிபதிக்கு கடிதம் அனுப்பி வைப்பு Reviewed by NEWMANNAR on November 07, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.