யுத்தம் முடிவடைந்து விட்ட போதும் அப்பாவி மக்களை அவஸ்தைக்கு உள்ளாக்கும் சம்பவம் தற்போது இடம் பெறுகின்றது-மன்னார் பிரஜைகள் குழு
மன்னார் பிரஜைகள் குழு கடந்த பல வருடங்களாக மன்னார் மாவட்ட மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்ற நிலையில் தற்போது மன்னார் பிரஜைகள் குழு குரல் அற்ற நிலையில் காணப்படும் எமது மக்களுக்காக குலலோடு குரலாக ஒலித்தக்கொண்டிருப்பதாகவும் தற்போதுள்ள பிரஜைகள் குழு உறுப்பினர்கள் தமது உயிரை பணயம் வைத்து சேவையாற்றி வருவதாகவும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.செபமாலை தெரிவித்தார்
மன்னார் மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அவற்றை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தும் முகமாக கடந்த திங்கட்கிழமை மாலை மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் மன்னார் ஊடகவியலாளர்களுக்கும்,பிரஜைகள் குழு உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.
இதன் போது பாதீக்கப்பட்ட கிராமங்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது உரையாற்றுகையிலேயே அருட்தந்தை அவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உறையாற்றுகையில்,,,,
மன்னார் பிரஜைகள் குழுவானது குரலற்ற எமது மக்களுக்கு குரலாக இருக்க வேண்டும் என்பதற்காக செயலாற்றிக்கொண்டிருக்கின்றது.
எமது பிரஜைகள் குழுவில் உள்ள உறுப்பினர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
தற்போது முள்ளிக்குளம் மக்களின் மீள் குடியேற்ற பிரச்சினை,தேவன் பிட்டியில் இடம் பெற்று வரும் சட்ட விரோத அட்டை பிடிப்பு போன்ற பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
எமது புதிய நிர்வாகம் தமிழ் பேசும் எமது மக்களுக்கு சகல உதவிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்ற என்னத்துடன் செயற்பட்டு வருகின்றது.
தற்போது எமது மக்கள் புது வித பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
யுத்தம் முடிவடைந்து விட்டது.ஆனால் அப்பாவி மக்களை வற்புருத்தி,கட்டாயப்படுத்தி அவஸ்தைக்கு உள்ளாக்கும் சம்பவம் தற்போது இடம் பெற்று வருகின்றது.நீதி எங்கள் பக்கம் இருந்தாலும் அநீதி மட்டுமே இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது.
குறிப்பாக அரசியல் வாதிகள் மற்றும் அரசியல் சார்ந்த மக்களாளும் எமது அப்பாவி மக்கள் தொடர்ந்தும் துன்பப்படுகின்றனர்.
இச்சம்பவம் கவலையளிக்கின்றது.எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் மன்னார் பிரஜைகள் குழுவினருக்கு மன்னார் ஊடகவியலாளர்களின் ஒத்துளைப்பு மிக அவசியமாக காணப்படுகின்றது.
நாங்கள் பாரிய நிதி பற்றாக்குறையுடனேயே தனிப்பட்ட உதவிகளுடன் செயற்பட்டு வருகின்றோம்.
இந்த நிலையில் எமது மக்களின் பிரச்சினைகள் வெளியில் வர வேண்டும் இதன் மூலம் அதற்காண தீர்வு கிடைக்க வேண்டும்.
நாங்கள் உள்லே பேசுகின்ற விடையங்கள் எவையும் வெளி உலகத்திற்கு செல்வதில்லை.ஊடகவியலாளர்கலாகிய நீங்களும் குரலற்ற மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கின்றீர்கள். இதன் காரணமாகவே உடகவியலாளர்களாகிய உங்களின் உதவியை நாங்கள் எதிர்பாத்துள்லோம்.
மன்னார் ஊடகவியலாளர்கள் உயிரை பணயம் வைத்து கடமையாற்றி வருகின்றனர்.
பல தடவை அவர்களுக்கு உயிர் அச்சுரத்தல்கள் ஏற்பட்டுள்ளமையினையும் நாம் அறிகின்றோம்.
இந்த நிலையில் தனிப்பட்ட மக்கள் தமது அச்சுருத்தல்களையும்,பிரச்சினைகளையும் தீர்வை பெற்றுக்கொள்ளுவதற்காக மன்னார் பிரஜைகள் குழுவில் முறைப்பாடுகளை செய்கின்றனர்.
அரசியல் வாதிகள் மற்றும் அவர்களின் கையால்களினால் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை எங்கும் செல்ல முடியாத நிலையில் எம்மிடம் வந்து முறையிட்டுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள் குறித்த குற்றவாளிகளுக்கு துனை பேகின்றனர்.எனவே கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும் எமது மக்களின் கண்ணீரை துடைக்க மன்னார் பிரஜைகள் குழுவுடன் மன்னார் ஊடகவியலாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.செபமாலை தெரிவித்தார்.
இதன் போது பிரஜைகள் குழுவின் உறுப்பினர்கள்,அருட்தந்தையர்கள்,பாதீக்கப்பட்ட மக்களின் பிரதி நிதிகள்,மற்றும் மன்னார் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
யுத்தம் முடிவடைந்து விட்ட போதும் அப்பாவி மக்களை அவஸ்தைக்கு உள்ளாக்கும் சம்பவம் தற்போது இடம் பெறுகின்றது-மன்னார் பிரஜைகள் குழு
Reviewed by NEWMANNAR
on
November 07, 2012
Rating:
No comments:
Post a Comment