அண்மைய செய்திகள்

recent
-

மீனவரின் படகுடன் கடற்படையின் படகு மோதிய விபத்தில் 1 மீனவர் காயம்-மன்னார் தாழ்வுபாட்டுக்கடலில் இன்று அதிகாலை சம்பவம்.

மன்னார் தாழ்வுபாட்டு கடற்கரையில் இருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கடற்பரப்பில் இரவு நேர மீன்பிடியில் ஈடுபட்ட மன்னார் தாழ்வுபாட்டு கிராம மீனவர் ஒருவரின் படகில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் அப்பகுதியில் றோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினரின் அதிவேக கண்ணாடியிலைப்படகு மோதியதில் அதில் இருந்த மீனவர் ஒருவர் காயமடைந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் குறிந்த மீனவர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 குறித்த சம்பவத்தில் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாழ்வுபாட்டு கிராமத்தைச் சேர்ந்த மீனவரான ஏ.ரி.மெரன்டா(வயது-56) என்பவர் தெரிவிக்கையில்,,, நானும் எனது மகன் எஸ்.மெரான்டா(வயது-29) ஆகிய இருவரும் ஒரு கண்ணாடி இழைப்படகில் நேற்று வியாழக்கிழமை மாலை இரவு நேர தங்குத்தொழிலுக்காக தாழ்வுபாட்டு கடற்பகுதியூடக தொழிலுக்குச் சென்றோம். பின் கடலில் வலைகளை போட்டு விட்டு தாழ்வுபாட்டு கடற்கரையில் இருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தொலையில் உள்ள கடற்பரப்பில் எமது படகை நங்கூரமிட்டு படகில் சமிக்ஞை ஒளியேற்றிய நிலையில் படகில் உறங்கிக்கொண்டிருந்தோம்.

 இதன் போது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் அப்பகுதியூடாக அதிவேக கண்ணாடியிழைப்படகில் றோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் அதி வேகமாக வந்து எங்களுடைய படகுடன் மோதிவிட்டு நிற்காது சென்று விட்டனர். இதன் போது எங்களுடைய படகு இரண்டாக உடைந்து நீரில் கவிழ்ந்து மிதந்து கொண்டிருந்தது.படகின் பெறுமதிமிக்க வெளி இணைப்பு இயந்திரம் கடலில் விழுந்து விட்டது. இதன் போது நான் காயங்களுக்கு உள்ளாகினேன்.

எனது மகனுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.பின் நாங்கள் இருவரும் உடைந்து மிதந்துகொண்டிருந்த படகின் மீது ஏறி இருந்து அபாயக்குரல் எழுப்பினோம். ஆனால் யாரும் வரவில்லை. நீண்ட நேரத்திற்கு பின் காலை நேரத்தில் தொழிலுக்கு வந்த எமது சக மீனவர்கள் எங்களை கண்டு மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் காயமடைந்த என்னை மன்னார் வைத்தியசாலையில் காலை அனுமதித்ததாக தந்தையான ஏ.ரி.மெரான்டா தெரிவித்தார்.



மீனவரின் படகுடன் கடற்படையின் படகு மோதிய விபத்தில் 1 மீனவர் காயம்-மன்னார் தாழ்வுபாட்டுக்கடலில் இன்று அதிகாலை சம்பவம். Reviewed by NEWMANNAR on November 09, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.