அண்மைய செய்திகள்

recent
-

ஒரு கிராமத்தின் வளர்ச்சியில்இளைஞர்களின்பங்களிப்பு அளப்பெரியது-வினோ எம்.பி

ஒரு கிராமத்தின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும் ஆற்றலும், திறமையும் உள்ள இளைஞர்களை புறந்தள்ளிவிட்டு சிறிநகர் கிராமத்தினை வவுனியாவில் முன்னணிக்கிராமமாக்கிவிட முடியாது.
அதிகாரிகளோ,அரசியல் வாதிகளோ எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்க கூடாது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.



 வவுனியா சிறிநகர் கிராம சிறிதுர்க்கா விளையாட்டுக்கழகமும்,சிறி சனசமூக நிலையமும் இணைந்து நடாத்திய வருடாந்த விளையாட்டுப்போட்டி அண்மையில் இடம் பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகயில்,,,,

 கிராமத்தில் இயங்குகின்ற சனசமூக நிலையம்,விளையாட்டுக்கழகம்,கோவில் நிர்வாகத்தினர்,கிராம அபிவிருத்திச்சங்கத்தினர் என அனைவரும் கிராமத்தின் முன்னேற்றத்தில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். வருடம் தோறும் விளையாட்டுப்போட்டிகளை நடாத்தி முடிப்பதுடன் விளையாட்டுக்கழகங்களின் கடமை முடிந்து விட்டது என கருதக்கூடாது.

 சமூகப்பணிகளிலும்,சமூதாய சீர்திருத்த பணிகளிலும் ஈடுபட வேண்டும். கிராமத்து மக்களின் அடிப்படை பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை தீர்த்து வைக்க முன்னின்று உழைக்க வேண்டும். எனது பங்களிப்பு தேவைப்படும் போது உங்களுடன் இணைந்து செயற்படுவேன். சிறி நகர் கிராமத்தில் உள்ள பொது அமைப்புக்களிடையே பேதங்களோ,வேற்றுமைகளோ இருக்கக்கூடாது. எல்லோரும் ஒன்று பட்டு உழைக்க வேண்டும்.தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கான தீர்வு இளைஞர்களிடமே காணப்படுகின்றது.என தனது உரையில் தெரிவித்தார்.
ஒரு கிராமத்தின் வளர்ச்சியில்இளைஞர்களின்பங்களிப்பு அளப்பெரியது-வினோ எம்.பி Reviewed by NEWMANNAR on November 09, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.