வீட்டு வளவுகளில் புகுந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றுமாறு வேண்டுகோள்
மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து தங்களது வீட்டு வளவுகளில்; புகுந்துள்ள வெள்ளநீரை வெளியேற்ற முடியாத நிலையில் தாங்களுள்ளதாக மன்னார் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் நுளம்புப் பெருக்கம் அதிகரித்துள்ளதுடன், சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளாதாகவும் அப்பிரதேசவாசிகள் கூறியுள்ளனர்.
எனவே, வெள்ளநீரை வீடுகளிலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை உரிய அதிகாரிகள் எடுக்கவேண்டுமென இப்பிரதேசவாசிகள் கோரியுள்ளனர்.
இது தொடர்பில் மன்னார் நகரசபையின் உபதலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸிடம் இன்று தொடர்புகொண்டு கேட்டபோது,
மன்னார் நகரசபை வெள்ளநீரை வாய்க்கால் வழியாக வெளியேற்றும் நடவடிக்கையை தற்போது மேற்கொண்டுள்ளது. எனினும், மன்னார் நகரசபையில் பணியாளர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. இந்நிலையில் மேலதிகமாக பணியாளர்களை இணைத்துக்கொண்டு வெள்ளநீரை வெளியேற்றும் நடவடிக்கையில் மன்னார் நகரசபை ஈடுபட்டுவருவதாகவும் கூறினார்.

Reviewed by NEWMANNAR
on
November 01, 2012
Rating:

No comments:
Post a Comment