அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வங்காலை அரச ஊழியர்களுக்காண வீடமைப்புத்திட்டம் நாளை ஆரம்பித்து வைப்பு.


ஜனசெவண பத்து இலட்சம் வீடமைப்புக்கான தேசிய வீடமைப்பு மற்றும் குடியிருப்பு அபிவிருத்தி நடவடிக்கைக்கு உட்பட்ட ஜனசெவண உபஹார தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள வங்காலை அரச ஊழியர்களுக்கான வீடமைப்புத்திட்ட நிர்மாணப்பணிகளை ஆரம்பிக்கும் பெரு விழா நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இடம் பெறவுள்ளது.

மன்னார்-மதவாச்சி பிரதான வீதீயில் சிறுநாவற்குளம் சாந்தியில் வங்காலை அரச ஊழியர்களுக்காண குறித்த வீடமைப்புத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் மஹிந்த சிந்தனை முன்னோக்கு திட்டத்தின் படி நிர்மாணத்துறை,பொறியியல் சேவைகள்,வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ஸ அவர்களின்  தலைமையில்  குறித்த வீட்டுத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

-இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிஸாட் பதீயுதீன், நிர்மாணத்துறை,பொறியியல் சேவைகள்,வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண,வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திர சிறி,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மன்னார் வங்காலை அரச ஊழியர்களுக்காண வீடமைப்புத்திட்டம் நாளை ஆரம்பித்து வைப்பு. Reviewed by NEWMANNAR on November 12, 2012 Rating: 5

1 comment:

Unknown said...

தவிர்க்க முடியாத காரணத்தினால் 13.11.2012 அன்று நடைபெறவிருந்த வங்காலை அரச ஊழியர்களுக்கான வீட்டுத்திட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்வானது இடம்பெறாது என்பதை அறியத்தருகின்றோம்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை
மன்னார் மாவட்டம்

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.