மன்னார் மாவட்ட சமாதான செயற்பாட்டுக் குழுவினர் அம்பாறைக்கு நல்லெண்ண விஜயம்- பட இணைப்பு.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக மன்னார் மாவட்ட சமாதான செயற்பாட்டுக்குழுவினர் அதன் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள சமாதான செயற்பாட்டுக் குழுவினரைச் சந்தித்தினர். கடந்த 23ஆம் திகதி வெள்ளிக் கிழமை தொடக்கம் 25ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வரையிலான இந்த மூன்று நாள் விஜயத்தின்போது பலவித நிகழ்ச்சிகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன.
இதே காலப்பகுதியில் மொனராகலை மாவட்டத்தில் இருந்தும் சமாதான செயற்பாட்டுக் குழுவினர் அம்பாறைக்கு வந்திருந்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒன்றான அட்டாளைச்சேனையில் கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை அம்பாறை, மன்னார், மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த சமாதானச் செயற்பாட்டுக்குழுவினர் ஒன்றிணைந்து அரைநாள் ஒன்றுகூடல் நிகழ்வை நடாத்தினர்.
இதில் அட்டாளைச்சேனை அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின்போது நாட்டின் சமாதானம் தொடர்பாக கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இன்று நிலவும் சமாதான சூழ்நிலையை எப்படி உண்மையான, நிலையான, நீடித்த, அர்த்தமுள்ள சமாதானமாக மாற்ற முடியும்? என்ற அடிப்படையில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
மன்னார் மாவட்ட சமாதான செயற்பாட்டுக் குழுவின் தலைவரான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் மன்னாரில் இருந்து ஒன்பது பேர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.
ஜனாப் மக்கள் காதர் (ஊடகவியலாளர்), திரு. ஏ. மரியதாஸ், (முன்னாள் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர்), திருமதி ஜெசி அருமைநாயகம் (பெண்கள் அமைப்புச் செயற்பாட்டாளர்), திருமதி கே. எச். பிரியந்தி (பூமலந்தான் சமூக சேவையாளர்) மற்றும் மன்னார் ஆர்.பி.ஆர் அமைப்பைச் சேர்ந்த திரு. தயாளன், திரு. ஜோண்சன் ஆகியோhர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
மன்னார் மாவட்ட சமாதான செயற்பாட்டுக் குழுவினர் அம்பாறைக்கு நல்லெண்ண விஜயம்- பட இணைப்பு.
Reviewed by Admin
on
November 26, 2012
Rating:
No comments:
Post a Comment